கிராமப்புற மற்றும் சமூக-பொருளாதார பின்னணி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான கல்வி செயலி

கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்வது நாம் அனைவரும் அறிந்ததே. நகரங்களில் உள்ள மற்றும் வசதியான பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் நவீன கற்பித்தல் உபகரணங்கள், இன்டர்ன்ஷிப், பயிற்சி பட்டறைகள் போன்றவை கிடைப்பதில்லை.

மேலும், கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலவும் கலாச்சார மற்றும் சமூக நெறிமுறைகள் பெரும்பாலும் பெண்கள், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கல்வி கற்க அனுமதிப்பதில்லை. இது பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளில் இடைவெளியை உருவாக்குகிறது.

ஒவ்வொரு மாணவரும் அவர்களின் சமூகபின்னணி அல்லது பொருளாதார சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களின் கனவுகளை அடைய ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உயரவும், பள்ளி அடிப்படைக்கல்வி, திறன் மேன்பாடு, உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல், NEET, JEE, CUET போன்ற உயர்கல்வி நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி, TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆகியவை வழங்கும் கல்விசெயலியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்த எண்ணத்தை முழுமையாக நிறைவேற்ற, உங்களைப் போன்ற அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி தேவை. தரமான மற்றும் அடிப்படை கல்வி கிடைக்காத மாணவர்களின் வாழ்க்கையில் உங்கள் பங்களிப்பு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்களுடைய நேரம், நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியம். மேலும் உங்கள் பங்களிப்புகள் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.