உண்மை (Truth)
இந்த வார்த்தை இல்லாவிட்டால் தனிமனித மற்றும் குழுக்களின் வெற்றி என்பது சாத்திய மாகாது. இது இல்லாவிட்டால் ஏமாற்றமும் ஏக்கமுமே எப்போதும் எஞ்சி நிற்கும்.
செயல் (Action)
எண்ணியவற்றை அடைய இருக்கும் ஒரே வழி, இப்போதே வேலையை ஆரம்பிப்பதாகும்.
உள்நோக்கம் (Intentional)
நான் எதை அடையவேண்டும் என்று நினைக்கி றேனோ, அதை அடைவதற்கான காரியங்களை, அதை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வதைக் குறிக்கிறது இது.
தயார்நிலை (Preparation)
நான் நினைத்த இடத்தைச் சென்றடையும் முன்னரே அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பது.
பதில்சொல்லும் பொறுப்பு (Accountability)
நம் குழு வெற்றியடைய என்ன செய்யவேண்டும் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதைச் செயல்படுத்தி அந்தச் செயல்பாடுகளால் வரும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பாக இருப்போம் என்பதை நம் குழுவினருக்கு ஐயமின்றித் தெளிவுபடுத்துதல்.
நம்பகத்தன்மை (Trust)
நம்முடைய குழுவினர் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்பட்டுவர உதவும் பசை இது.
தியாகம் (Sacrifice)
ஒரு தனிநபராக நமக்குச் சிறந்ததாகவும் நாம் இருக்கும் குழுவுக்கு ஒவ்வாததாகவும் இருக்கும் ஒரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது.
ஒழுக்கம் (Discipline)
நம்முடைய முந்தைய சுக, துக்க, முட்டாள் தனமான, கடினமான விஷயங்களிலிருந்து நம்மை வெளியே எடுத்துவரக்கூடிய கவனமான மனநிலையைக் குறிக்கிறது இது.
அர்ப்பணிப்பு மனநிலை (Commitment)
நம்முடைய வார்த்தைக்கு நான் தரும் மதிப்பு, நம்முடைய அணியின் உறுப்பினர் ஒவ்வொரு வருக்குப்பின் நாம் நின்று தாங்கிப்பிடிக்கும் வகையிலான பாதுகாப்பு, நம்முடைய அணியின் நன்மையை எப்போதுமே கருத்தில்கொள்வது.
நம்பிக்கை (Belief)
நாம் ஈடுபடும் காரியங்களில் வெற்றிபெறுவதற் காக நாம் எடுக்கும் முயற்சிகள், ஆராய்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் தயார்நிலைப்படுத்திக் கொள்ளுதல் நமக்கு வெற்றியைக் கொண்டுவந்து தரும் என்பதைக் குறிக்கிற வார்த்தை இது.
தேவையில்லாதது (Unrequired)
நம்முடைய குழுவின் வெற்றிக்கு அவசியமான தாக இருக்கும்; அதே சமயத்தில் குழுவில் உள்ள மற்றவர்கள் அதனை ஒரு வேலையாகப் பார்க்காத, சிந்திக்காத மற்றும் செய்ய விரும்பாதிருக்கும் ஒன்றை முக்கியமான ஒன்றாகக் கருதி செய்வதைக் குறிக்கிறது இந்த வார்த்தை.
தெரிவுகள் (Choices)
சரியானவர்களின் பேச்சை நான் கேட்பதன் மூலமே நான் சரியான முடிவுகளை எடுக்கமுடியும் என்பதை உணர்வது.
நட்புவட்டம் (Circles)
நம் எதிர்காலத்தின்மீது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் எந்த மாதிரியான நபராக நாம் உருவெடுப்போம் என்பதை நிர்ண யிக்கக்கூடிய நபர்களில் யாரை நம்முடன் பழக அனுமதிக்கிறோம் என்பதைக் குறிக்கிற வார்த்தை.
போட்டி (Competition)
நாம் தலைசிறந்து விளங்க நினைக்கும் துறையில் நமக்கு எதிராக இருக்கிற ஒரு விஷயம் போட்டி. இது நமக்கு எதிராகவும் நாம் அதற்கு எதிராகவும் அன்றாடம் இயங்கியாக வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.
வேட்கை (Passion)
நமக்குள் இருந்து நாம் விரும்பும் ஒரு விஷயத்தை நோக்கி நம்மை உந்தித்தள்ளும் ஒன்று இது. பலமுறை நம்மால் முடியாது என்று நினைத்த எல்லைகளையெல்லாம் தாண்டிச் செல்ல உதவும்.
பழக்கம் (Habit)
இவற்றில் நல்லவை என்பது நமக்கு மிகவும் உதவும் ஒன்றாகும். இதை உருவாக்கிக்கொள்வது கடினம் என்றால் அதை விட்டொழிப்பது என்பது அதைவிட மிகக்கடினம்.
அவசரம் (Urgency)
‘இப்போதே’ எனும் வார்த்தையே ‘பின்னர்’ என்ற வார்த்தையைவிட அதிக அளவில் வெற்றியை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
தரம் (Standards)
நாம் நம்மீதும் நம்முடைய குழுவினரின் மீதும் எந்த அளவிலான எதிர்பார்ப்பை வைத்துள் ளோம் என்பதைக் குறிப்பிடுவதுதான் தரம். இது சரியாக அமைந்துவிட்டால் எங்கே இருக்கிறது குறைபாடு என்பதைச் சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம்.
தைரியம் (Courage)
நாம் எதிர்கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களுக்குத் தேவையான நம்மாலான அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டோம் என்பதை முழுமையாய் உணர்ந்துகொள்ளும் போது நமக்கு வரும் உணர்வு.
ஆர்வம் (Curiosity)
நாம் அடைய வேண்டிய இலக்கைச் சென்றடைய, நமக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் பலவும் நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கும் நிலை யில் நமக்கு இருப்பது இது.
மரியாதை (Respect)
இதை நாம் மற்றவருக்குக் காட்டும்போது நம்முடைய பணிவை அது வெளிப் படுத்தும். நாம் நாளடைவில் இதைச் சம்பாதிக்கவேண்டி இருக்கும்.
சீர்ப்படுத்துதல் (Adjustment)
நாம் செல்லும் பாதை தவறு என்பதை உணர்ந்து மாற்றுப்பாதையை தேர்ந்தெடுப்பதைக் குறிக்கும் வார்த்தை இது.
அடக்கம் (Humility)
‘எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை நாம்’ என்ற உணர்வை நம்முள்ளே ஊட்டி நம்மைக் கற்றுக் கொள்ளத் தூண்டும் வார்த்தை இது.
முதலீடு (Investment)
சின்னதோ பெரியதோ, நாம் இன்று செய்யும் காரியங்கள் பலவும் இன்றைக்கே பலனைத் தரா விட்டாலும் எதிர்காலத்தில் அது நிச்சயமாக உதவும் என்பதை உணர்ந்து செயல்படுவது.
திறமை (Talent)
எப்போதும் நம்மிடம் இது அதிகமாக இருப்பது போல் உணர்வது. உண்மையில் தொடர்ந்து ஒரு கூடுதல் பரிமாணத்தை அதிகரித்துக்கொண்டே போனால் மட்டுமே கொஞ்ச நஞ்சமாவது நம்மிடம் எஞ்சி நிற்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.