இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

December 31, 2022

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளா்கள் ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையானது , 38மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்களில்‌ செயல்படும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கான

இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ இப்பயிற்சி வகுப்புகளில்‌ ஆண்டுதோறும்‌ 20,000-த்திற்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்‌.

மேலும்‌, இத்தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குத்‌ தயாராகும்‌ ஆர்வலர்களுக்கு உதவும்‌ வகையில்‌, தேர்ந்த பயிற்சியாளர்களைக்‌ கொண்டு பயிற்சி வகுப்புகள்‌ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, 38 மாவட்டங்களில்‌ இயங்கும்‌ இலவச

பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும்‌ விருப்பமுள்ள மற்றும்‌ முன்‌அனுபவம்‌ உள்ள ஆசிரியர்கள்‌ / முன்னாள்‌ மாணவர்கள்‌ / போட்டித்தேர்வு வெற்றியாளர்கள்‌ ஆகியோர்‌॥https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeR7gbS7N3pmO4XY0AgCFMMoZaTL68apsVB9Z1ZUhZrZ_s4VQ/viewform -இல்‌ உள்ள விண்ணப்பத்தினை 10.01.2023-க்குள்‌

பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து மேலும்‌ விவரங்களுக்கு 044-22501006 /22501002 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்‌ துறையின்‌ இயக்குநர்‌

திரு.கொ.வீரராகவ ராவ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Copyright © 2023 KalviApp. All rights reserved.