இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 26, 2017

வண்ணக் கலை, சிற்பக் கலை – அரசு கவின் கலைக் கல்லூரி

‘காலங்களில் அவள் வசந்தம்…’ என்று பாடத் தொடங்கிய கவியரசு கண்ணதாசன், அடுத்த வரியிலேயே, ‘கலைகளிலே அவள் ஓவியம்’ என்று சிலாகித்தார். அப்படிக் கலைகளில் சிறப்பானது ஓவியக் கலை. அது மட்டுமல்ல, ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண்பார்வை இழந்தாலும் காணும் வகை செய்தான்…’ என்று சிற்பக் கலையின் பெருமையையும் பாடியிருக்கிறார் கவியரசு. ஓவியமும் சிற்பமும் புராதன கலைகளாகக் கருதப்பட்டாலும், கால மாறுதல்களுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று, அதே சமயம் தங்கள் உன்னதம் கெடாமல் ஓங்கி வளர்ந்துள்ளன. மரபு ஓவியம் மாடர்ன் ஆர்ட் ஆகிவிட்டது. கமர்ஷியல் ஆர்ட், விஷுவல் கம்யூனி கேஷனாகிவிட்டது. ‘காலங்களில் அவள் வசந்தம்…’ என்று பாடத் தொடங்கிய கவியரசு கண்ணதாசன், அடுத்த வரியிலேயே, ‘கலைகளிலே அவள் ஓவியம்’ என்று சிலாகித்தார். அப்படிக் கலைகளில் சிறப்பானது ஓவியக் கலை. அது மட்டுமல்ல, ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண்பார்வை இழந்தாலும் காணும் வகை செய்தான்…’ என்று சிற்பக் கலையின் பெருமையையும் பாடியிருக்கிறார் கவியரசு. ஓவியமும் சிற்பமும் புராதன கலைகளாகக் கருதப்பட்டாலும், கால மாறுதல்களுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று, அதே சமயம் தங்கள் உன்னதம் கெடாமல் ஓங்கி வளர்ந்துள்ளன. மரபு ஓவியம் மாடர்ன் ஆர்ட் ஆகிவிட்டது. கமர்ஷியல் ஆர்ட், விஷுவல் கம்யூனி கேஷனாகிவிட்டது.
‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பார்கள். ஆனால், முறையாக இதைக் கற்றுக்கொடுக்கவும் கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தக் கலையில் தீவிர ஆர்வம் உள்ள மாணவர்களை இக்கல்வி நிலையங்கள் பட்டை தீட்டி ஜொலிக்கச் செய்கின்றன.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக் (இண்டஸ்ட்ரியல் டிசைன்), டெக்ஸ்டைல் (இண்டஸ்ட்ரியல் டிசைன்), விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன், பெயின்ட்டிங், சிற்பம், பிரின்ட் மேக்கிங் ஆகிய துறைகளில் இளநிலை நுண் கலைப் பட்டம் (பி.எஃப்.ஏ.) பெறலாம். பிளஸ்- டூ படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி, இப்படிப்பில் சேரலாம். முதுநிலை நுண்கலைப் பட்டம் (எம்.எஃப்.ஏ.) படிக்கவும் வாய்ப்பு கள் உண்டு. இந்த ஆண்டு சிற்பத் துறையிலும் எம்.எஃப்.ஏ. தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும்.
1852-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பில் பல்வேறு படிப்புகள் உள்ளன. வண்ணக் கலை (பெயிண்ட்டிங்) 20 இடங்கள், சிற்பக் கலைக்கு 10 இடங்கள், காட்சி வழி, தொடர்பு வழி அமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்) 20 இடங்கள், பதிப்போவியக் கலை (பிரிண்ட்டிங் மேக்கிங்) 10 இடங்கள், சுடுமண் வடிவமைப்பு (செராமிக் டிசைன்) 15 இடங்கள், துகிலியல் (டெக்ஸ்டைல்ஸ் டிசைன்) 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரியில் சேர தனி நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில் இருந்து 50 மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இதே கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி உள்ளது. இரு பாலருக்கான இக் கல்லூரியில் விடுதி வசதி இல்லாததால் வெளியில் தங்கி படிக்க வேண்டும்.
கலைத்துறை படிப்புக்கு வாய்ப்புகள் மிக குறைவு என தவறான கருத்து உள்ளது. இப் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத் துறை, சினிமாத் துறை, விளம்பரத் துறை, கல்விக் கூடங்கள், மல்டி மீடியா அனிமேஷன் இண்டஸ்டிரியல், ஆர்ட் பெயிண்ட் கேலரி, செராமிக் டிசைனர், இண்டீரியல் எக்ஸிபிஷன் டிசைனர், ஃபீரி லேன்சர் பெயிண்ட்டர் என வண்ணக்கலை படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
இந்தப் படிப்புகளைப் படிக்க, பணம் அதிகம் செலவழிக்கவேண்டுமா?அரசு கவின் கலைக் கல்லூரியில் படிக்கச் செலுத்த வேண்டிய கட்டணம், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விடக் குறைவு. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் 2,000 ரூபாய்க்கும் குறைவு. பிற மாநில மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10 ஆயிரம். தவிர, செய்முறைப் பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவாகும். கூடுதலாக 1,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கல்லூரியே வழங்கும். செய்முறைப் பயிற்சிக்காகத் தயாரிக்கும் ஓவியங்களையோ சிற்பங்களையோ மாணவர்கள் நல்ல விலைக்கு விற்க முடியும். தவிர, படிக்கும் போதே தனி வேலைகளை எடுத்துப் பணம் சம்பாதிக்கும் துறுதுறு மாணவர்களும் உண்டு.
இங்கு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கும். ஆண்டு தோறும் 21 நாட்கள் கல்விச் சுற்றுலா செல்ல, கல்லூரியே ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள கலைப் பாரம்பரியம் மிக்க பிரசித்தி பெற்ற இடங்களைக் கண்டு, தங்கள் கலைத் திறனை மாணவர்கள் மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.
இங்கே என்னென்ன கற்றுத் தருகிறார்கள்?ஓவியத்தைப் பொறுத்தவரை, மரபு ரீதியான ஓவியத்திலிருந்து மாடர்ன் ஆர்ட் வரை பல்வேறு வகை ஓவியங் களை வரையக் கற்றுத் தரப்படுகிறது. இந்தியக் கலை வரலாறு, கம்யூனிகேஷன் டிசைன், பிரின்ட் மேக்கிங் உள்பட ஓவியம் தொடர்பான பல்வேறு அம்சங்களும் கற்றுத் தரப்படுகின்றன. சிற்பக் கலை பயிலும் மாணவர்களுக்குக் கல், உலோகம், களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இந்த நான்கிலும் சிலை வடிக்கக் கற்றுத் தரப்படுகிறது. ஓவிய மாணவர்கள் சிற்பத்திலும், சிற்பப் பிரிவு மாணவர்கள் ஓவியத்திலும் பரஸ்பர ஈடுபாடு காட்டுவது உண்டு. செராமிக் டிசைன் படிப்பில், பீங்கானில் பல்வேறு கலைப் பொருள்களை உருவாக்கக் கற்றுத்தருகிறார்கள்.
முன்பு, கமர்ஷியல் ஆர்ட் டிப்ளமோ படிப்பாக இருந்ததுதான் தற்போது விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப் படிப்பாக மாறியுள்ளது. விளம்பர டிசைன்கள், கிராஃபிக் டிசைன், போஸ்டர் மேக்கிங், அட்வர்டைஸிங், லே-அவுட், பிரின்ட் மேக்கிங் உள்பட விஷுவல் கம்யூனிகேஷன் தொழில்நுட்பங்கள் அனைத்தும் கற்றுத் தரப்படுகின்றன.
துணிகளுக்குத் தேவையான அழகான வர்ணத்தைத் தேர்ந்தெடுத்து மக்களைக் கவரும் வகை யில் டிசைன்களை உருவாக்குவது டெக்ஸ்டைல் டிசைனர்களின் வேலை. டெக்ஸ் டைல் கெமிஸ்ட்ரி, டெக்ஸ் டைல் டிசைனிங், பிரின்ட்டிங், நெசவு, சாயம் ஏற்றுதல் உள்ளிட்டவை இப்பாடப் பிரிவு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன.
எங்கே வேலை வாய்ப்பு?ஓவியக் கலை படித்த வர்கள் எல்லாம் கிராமத்துப் பள்ளிகளில் டிராயிங் மாஸ்டராகச் சேர்ந்து, பிள்ளைகளுக்கு ஆடு, மாடு, மரம் வரைந்து காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா என்று ஆயாசமாக நினைக்க வேண்டியது இல்லை. அதெல்லாம் அந்தக் காலம்! அனிமேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், அட்வர் டைஸிங், இன்ட்டீரியர் டெகரேஷன், ஆர்ட் டைரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. நுண்கலைப் படிப்புகளோடு அதற்குத் தொடர்புள்ள சில கம்ப்யூட்டர் பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைக்கிறது.
அட்வர்டைஸிங் நிறுவனங்களில் விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். தொலைக்காட்சி மற்றும் சினிமாவிலும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ‘சானிட்டரி வேர்’ போன்ற பீங்கான் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், மின்சாதன தயாரிப்பு நிறுவனங்கள், கட்டடக் கலை நிறுவனங்கள் போன்ற வற்றில் செராமிக் டிசைன் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் நெசவாளர் சேவை மையங்களில் டெக்ஸ்டைல் டிசைன் படித்தவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். ஏற்றுமதி ஆடை நிறுவனங்களிலும், டெக்ஸ்டைல் மில்களிலும்கூடப் பணியில் சேரலாம். திறமை உள்ளவர்கள் காஸ்ட்யூம் டிசைனர் ஆகிக் கொடி கட்டிப் பறக்கமுடியும்.
வேறு பணிகளில் உள்ளவர்கள் புத்துணர்வு பெறுவதற்காக ஓவியம் வரைதல், டிசைனிங் செய்தல் என ஈடுபடுவார்கள். ஆனால், அதையே படிப்பாக முடித்து, ஜாலியாக வேலை செய்து கணிசமாகச் சம்பாதிக்க முடிகிறதென்றால், நிச்சயம் இது கரும்பு தின்னக் கூலிதானே?
முதல் ஓவியப் பயிற்சி நிலையம்!  சென்னை, அரசு கவின் கலைக் கல்லூரிதான் நாட்டிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தொழிற்கலைப் பள்ளி ஆகும். பிரிட்டிஷ் ராணுவ சேவையில் இருந்த பிரபல சர்ஜன் அலெக் ஸாண்டர் ஹண்டர் என்பவர் 1850-ல் சென்னையில் இந்தத் தொழிற்கலை பள்ளியைத் (ஸ்கூல் ஆஃப் இண்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ்) தொடங்கினார். இதையடுத்து 1875-ல் மும்பை, கொல்கத்தா, லாகூர் ஆகிய இடங்களில் இதே போன்ற தொழிற் கலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
பிரபல ஓவியர் கே.சி.எஸ்.பணிக்கர் முதல்வராக இருந்த காலத்தில், சென்னையில் இருந்த தொழிற் கலைப் பள்ளி கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது!  பொம்மை காலேஜ்!கும்பகோணம் நகராட்சியால் 1887-ல் தொடங்கப்பட்ட சித்ரகலாசாலை, அந்தக் காலத்தில் ‘பொம்மை காலேஜ்’ என்று மக்களிடம் பிரபலமாக இருந்தது. பின்னர் ‘ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் மாறி, தற்போது அரசு கவின் கலைக் கல்லூரியாகத் திகழ்கிறது. அங்கு ஓவியம், சிற்பம், விஷுவல் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை நுண்கலைப் பட்டப்படிப்பு (பி.எஃப்.ஏ.) படிக்கலாம். ஓவியம், சிற்பம் ஆகிய இரண்டிலும் முதுநிலை நுண்கலைப் பட்டப்படிப்பு (எம்.எஃப்.ஏ.) படிக்கவும் வாய்ப்பு உண்டு. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குத் திருச்சி, பாரதிதாசன் பல் கலைக்கழகம் பட்டங்கள் வழங்கும்!
தமிழக ஓவியங்களுக்கும் மவுசு! வான்கா, பிக்காஸோ ஓவியங்கள் போல சம காலத்தில் மும்பையில் உள்ள எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலை போகின் றன. ஒரு ஓவியம் ஒரு கோடி ரூபாய் வீதம், நூறு ஓவியங்களை 100 கோடி ரூபாய்க்கு விற்பதாக ஹுசேன் ஒப்பந்தம் செய்து கொண்டது சில மாதங்களுக்கு முந்தைய பரபரப்புச் செய்தி. இப்போது தமிழக ஓவியர்களின் காட்டில் நல்ல மழை! ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன் ஆகியோரின் ஓவியங்களும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை விற்பனை ஆகியுள்ளன!
மகாபலிபுரம் சிற்பக் கல்லூரி!மகாபலிபுரத்தில் 1958-ம் ஆண்டு சிற்பக்கலைப் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு, படிப்படியாக வளர்ந்து, 1980-ல் சிற்பக் கல்லூரியாக பரிணாமம் பெற்றுள்ளது. கோயில் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு படிக்கலாம். டிப்ளமோ படிப்புகளும் உண்டு!

Copyright © 2023 KalviApp. All rights reserved.