இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 03, 2019

Competitive Exam Questions – Choose the correct Answer – பின்வருவனவற்றில் எது ஹோலோசோயிக் ஊட்டமுறை கொண்ட உயிரி?

1. திரவம் மற்றும் திண்மப் பொருள்களின் துகள்களைவிட வாயுக்களின் துகள்கள் _________ பரவுகின்றன.
A) குறைவாக
B) மிதமாக
C) வேகமாக
D) மிக வேகமாக

2. பருப்பொருளின் நான்காவது நிலை
A) பிளாஸ்மா
B) வாயு
C) திண்மம்
D) நீர்மம்

3. 1 நேனோமீட்டர் என்பது
A) 10-8மீட்டர்
B) 10-9 மீட்டர்
C) 109 மீட்டர்
D) 108 மீட்டர்

4. அவிசின்னியா தாவரம் ஒரு
A) சேமிப்பு வேர்வகை
B) சுவாச வேர் வகை
C) தாங்கு வேர் வகை
D) தூண் வேர் வகை

5. பின்வருவனவற்றுள் கதிர் வடிவ சேமிப்பு வேரைக் கொண்டது?
A) கேரட்
B) முள்ளங்கி
C) பீட்ரூட்
D) டர்னிப்

6. பின்வருவனவற்றுள் எது எதிர் ஒளிச் சார்பசைவு கொண்டது?
A) தண்டு
B) இலை
C) கனிகள்
D) வேர்

7. தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது?
A) இலை
B) தண்டு
C) மலர்கள்
D) வேர்

8.பின்வரும் தாவரத்தின் பாகங்களில் உறுப்புகளின் அடிப்படையில் பொருத்தமற்றது?
A) வேர்
B) தண்டு
C) இலை
D) மலர்கள்

9. சிறுசெடி வகையில் தவறானது?
A) நெல்
B) கோதுமை
C) துளசி
D) முள்ளங்கி

10. பின்வருவனவற்றில் எது இடைநிலைத் தாவரம்?
A) ஐக்கார்னியா
B) சூரியகாந்தி
C) சப்பாத்திக்கள்ளி
D) பேரீச்சமரம்

11. சிறுகுடல் _________ மீட்டர் நீளமுடையது.
A) 5 மீட்டர்
B) 6 மீட்டர்
C) 7 மீட்டர்
D) 8 மீட்டர்

12. சாம்பாரில் இல்லாத சத்துப்பொருள் எது?
A) புரதம்
B) கொழுப்பு
C) கார்போஹைட்ரேட
D) வைட்டமின்

13. அசைபோடும் பாலூட்டிகளில் செல்லுலோசை செரிக்க சுரக்கும் நொதி?
A) அமைலேஸ்
B) செல்லுலேஸ்
C) சீக்கம்
D) ரூமன்

14. செரித்தலின் முடிவில் கார்போஹைட்ரேட்டுகள் சிதைந்து _________ ஆக மாறுகிறது.
A) அமினோ அமிலங்கள்
B) கொழுப்பு அமிலங்கள்
C) குளுக்கோஸ்
D) கிளைக்கோஜன்

15. பின்வருவனவற்றில் எது ஹோலோசோயிக் ஊட்டமுறை கொண்ட உயிரி?
A) பாக்டீரியா
B) வைரஸ்
C) அமீபா
D) மீன்

16. இழைகளின் இராணி எனப்படுவது?
A) பருத்தி
B) பட்டு
C) சணல்
D) இலவம்

17. தோலினைச் சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் பயோகிலிப் முறையைக் கண்டுபிடித்தவர்கள்?
A) சீனர்கள்
B) இந்தியர்கள்
C) ஆஸ்திரேலியர்கள்
D) அமெரிக்கர்கள்

18. பஸ்மினா சால்வைகள் எந்த விலங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A) செம்மறியாடு
B) வெள்ளாடு
C) லாமா
D) யாக்

19. ஒரு தேன் கூட்டில் முட்டையிடுவதை மட்டுமே வேலையாக கொண்ட தேனீ?
A) டிரோன்
B) ராணித்தேனீ
C) வேலைக்காரத் தேனீ
D) ஆண் தேனீ

20. ஒரு தேன் கூட்டில் உள்ள ஆண் தேனீக்களின் எண்ணிக்கை?
A) ஒன்று
B) பத்து
C) நூற்றுக்கணக்கான
D) ஆயிரக்கணக்கான


Answers:

1. C
2. A
3. B
4. B
5. B
6. D
7. C
8. D
9. C
10. B
11. C
12. C
13. B
14. C
15. C
16. B
17. C
18. B
19. B
20. C


எதாவது பிழைகள் மற்றும் விடைகளில் தவறுகள் இருந்தால் KalviApp@gmail.com-ல் தெரிவித்து மற்றவைகள் சரியான விடையை அறிய உதவி செய்யவும்.

 

Copyright © 2023 KalviApp. All rights reserved.