1. அணு என்பதன் ஆங்கிலச் சொல் அட்டாமஸ் என்பது எந்த சொல்லிலிருந்து வந்துள்ளது?
A) இலத்தீன்
B) ஆங்கிலம்
C) கிரேக்கம்
D) வடமொழி
2. ஒடுக்கம் என்பது ______________ ஆகும்.
A) ஹைட்ரஜனை நீக்குதல்
B) ஆக்ஸிஜனை ஏற்றல்
C) எலக்ட்ராகளை இழத்தல்
D) ஆக்ஸிஜனை நீக்குதல்
3. கரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவையே ______________எனப்படும்.
A) கரைசல்கள்
B) கூழ்மங்கள்
C) தொங்கல்கள்
D) கரைபொருள்கள்
4. தொடர்ந்து ஒழுங்கில்லா நிலையில் இயங்கும் கூழ்மத்துகளின் இயக்கமே ______________ ஆகும்
A) பிரௌனியின் இயக்கம்
B) ஹென்றியின் விதி
C) டின்டால் விளைவு
D) பாஸ்கல் விதி
5. சுட்ட சுண்ணாம்பு நீருடன் வினைபுரிந்து ______________ யை உருவாக்குகிறது
A) சோடியம் ஹைட்ராக்சைடு
B) சோடியம் குளோரைடு
C) கால்சியம் சல்பேட்
D) கால்சியம் ஹைட்ராக்சைடு
6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது? எது
A) ரேடியம் – மேடம் க்யூரி
B) கதிரியக்கம் – ஹென்ரி பெக்கரல்
C) நியூட்ரான் – சாட்விக்
D) புரோட்டான் – எதிர்மின் சுமை
7. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
A) மின்னிறக்கக்குழாய்
B) வெப்ப விளைவு
C) காந்தப்புல விளைவு
D) அனைத்தும் தவறு
8. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
A) காப்பர் சல்பேட்
B) சில்வர் நைட்ரேட்
C) சோடியம் பென்சோயேட்
D) சில்வர் புரோமைடு
9. குளிர் பச்சை எண்ணெய் என்பது?
A) மீதைல் சாலிசிலேட்
B) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
C) ரூடவ்தைல் சாலிசிலேட்
D) பென்சோயிக் அமிலம்
10. பென்சிலில் உள்ள எழுதும் பொருளில் கலவை?
A) கார்பன் மற்றும் ஆக்சிஜன்
B) கார்பன் மற்றும் கண்ணாடி
C) கார்பன் மற்றும் களிமண்
D) கார்பன் மற்றும் நைட்ரஜண்
————
Answers
1. C
2. D
3. C
4. A
5. D
6. D
7. A
8. B
9. A
10. C