இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 03, 2018

இந்திய வரலாறு படிக்கும்போது இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க..! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

இந்திய வரலாறு படிக்கும்போது இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க..! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

#3 முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள்
இந்திய வரலாறு பகுதி 3 – நவீன கால இந்திய வரலாறு ( Modern Indian history )

போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களில் பெரும்பாலானோருக்குப் பிடித்த பாடம் இந்த நவீன இந்திய வரலாறு என்று சொல்லப்படும் Modern India. காரணம் ஐரோப்பியர்கள் வணிகர்களாக இந்தியா வருவது, ஆட்சியாளர்களாக மாறுவது, இந்தியர்களின் விடுதலை வேட்கை, தியாகம், இமாலய போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கும் வெற்றி என இப்போதும் படிப்பதற்கு மிக விறுவிறுப்பான கதைக்களமாக அமைவதால், நமக்குப் படிக்க ரொம்ப ஈஸியாகவே இருக்கும். இந்தத் தலைப்பு பற்றி பலர் என்கிட்ட சொல்றது “நடந்த நிகழ்வுகளும், விஷயங்களும் நல்லா ஞாபகத்தில் இருக்கு ஆனால், வருடங்கள் தான் மனதில் நிற்க மாட்டேங்குது. ”வருடங்கள் நம் மனதில் “நிற்குதோ” இல்ல உட்கார்கிறதோ’ அது முக்கியமில்லை, ‘டக்’கென்று ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு ஆழமாகப் படித்து வைத்துக்கொள்வது நம் கடமை. பல நண்பர்களோட 10 டிஜிட் செல்போன் நம்பர்களை ஞாபகத்துல வைத்துக்கொள்ள முடிந்த நமக்கு நான்கு டிஜிட் கொண்ட ஆண்டுகளை நினைவில் கொள்வதா கடினம்? நிச்சயம் இல்லை!”

முதன் முதலில் இந்தியாவுக்கு வருகை புரிந்தவர்கள் – அவர்கள் பெயர்கள்/எந்த நாடு, எப்போது வந்தார்கள், இங்கு எங்கு இருந்தார்கள், முக்கிய நிகழ்வுகள் என 4 தலைப்புகளாக பிரித்து ஒரு “டேபிள் போட்டு வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

உதாரண டேபிள்

பெயர்/ நாடு வருடம் இங்கு எங்கு வந்தார்கள்/ இருந்தார்கள் முக்கிய நிகழ்வுகள்

போர்த்துக்கீசியர்கள்
அ. வாஸ்கோடகாமா 1498. காலிகட் அப்போது அவரை ஸமோரின் என்ற பட்டம்கொண்ட இந்து வரவேற்றார். வாஸ்கோ ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்த முதல் இந்தியர்.
ஆ. ஃபிரான்சிஸ்கோ அல்மெய்தா 1505-09 கொச்சின் முதல் போர்த்துக்கீசிய கவர்னர்
இ. அல்போன்ஸோ ஆல்பக்குயூபக்யூ 1509-15 கொச்சின் இரண்டாவது போர்த்துக்கீசிய கவர்னர்

இப்படி டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அனைவருக்கும் தனித்தனி டேபிள்களைப் போட்டு வைத்துக்கொள்ளலாம். இப்படி டேபிள் வரையிறதுலேயே நேரமாகி விடுமே என்று நினைக்க வேண்டாம், டேபிள் தயார் செய்யும் நேரத்தில் அவற்றை பலமுறை திருப்புதல் (Revision) செய்துவிடலாம். அதோடு சேர்த்து ராபர்ட் க்ளைவ் டூப்பளே போன்ற முக்கிய கவர்னர்கள், கர்னாடிக் போர்கள், ப்ளாசி போர், பக்சார் போர் மற்றும் அதன் முக்கியம்சங்கள் போன்றவை மிக முக்கியம்.

உதாரண கேள்வி (TNPSC group I 2017)

இவற்றில் மூன்றாவது கர்நாட்டி போருடன் எந்த ஐரோப்பிய போர் தொடர்புடையது?
ஏழு ஆண்டு போர் (பதில்)
ஆஸ்ட்ரியன் வாரிசுப் போர்
C. வார் ஆஃப் ரோஸஸ்
D. ஆஸ்ட்ரோ ப்ருசிய போர் (austro prussian war ).

அதேபோல் ஆங்லோ – சீக் போர். ஆங்லோ நேபால், ஆங்லோ பர்மீஸ், ஆங்லோ டிபெட்டியன் போர்களும் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. அடுத்த முக்கிய தலைப்பு 1857-ம் ஆண்டு நடத்த ‘சிப்பாய் மியூட்டினி’. அதற்கான டாக்டரீன் ஆஃப் லாப்ஸ், சப்சிடரி அலையன்ஸ் உள்ளிட்ட காரணங்கள், யாரெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள் அவர்கள் எங்கு ஆட்சி செய்தார்கள் மற்றும் இதன் முடிவில் இயற்றப்பட்ட சட்டங்கள் வரை அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.

உதாரண கேள்வி

I. க்வீன்ஸ் ப்ரோக்லமேஷன் 1858-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

II. 1858-ம் ஆண்டு கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா ஆக்ட் இயற்றப்பட்டது.

இவற்றில்

Statement I is correct
Statement II is correct
Both statements are correct ( பதில்)
Both statements are wrong

ஆரம்ப கால பிரிட்டிஷ் நிர்வாக மற்றும் பொருளாதார கட்டமைப்புகளைப் பற்றி தெரிந்துவைத்துக்கொள்வது மிக அவசியம். ரயத்வாரி, ஜமீந்தாரி, மஹால்வாரிவற்றையும், அதனால் வருவாய், விவசாயம், உற்பத்தி, சிறு தொழில் ஆகியவற்றுக்கு எற்பட்ட பாதிப்பு ஆகிய அவற்றை தெரிந்துவைத்துக்கொண்டால் மெயின் தேர்வுகளிலும், கட்டுரை தாளிலும் இதில் படித்த கருத்துகளைத் தேவையான இடங்களில் பயன்படுத்தலாம்.

சிப்பாய் மியூட்னிக்கு முன்பாகவும் பின்பாகவும் நடத்த எதிரெழுச்சி போராட்டங்களைப் பற்றி ஆண்டுகளோடு தெரிந்து வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். பில் எழுச்சி (1818-31), கோல் எழுச்சி (1831-32), சாந்தல்களின் எதிர்ப்பு போராட்டம், ராமோசி போராட்டம், மண்டா போராட்டங்கள் , பகத் இயக்கப் போராட்டங்கள் ஆகியவற்றில் எல்லாம் இருந்து பல முறை கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

உதாரண கேள்வி
I. மோப்லா எதிரெழுச்சிப் போராட்டம் 1835-ம் ஆண்டு நடந்தது
II. மோப்லா மக்கள் பெரும்பாலும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் ஆவர்

Statement I is correct
Statement II is correct
Both are correct (பதில் )
Both are wrong

வரலாற்றைப் பொறுத்தவரை நாம் இப்போது பார்த்த, அடுத்தடுத்து பார்க்கப் போகின்ற பகுதிகள் மிக மிக முக்கியம். எளிதாக ஐந்து முதல் பத்து சதவிகிதம் TNPSC மற்றும் UPSC என அனைத்து தேர்வுகளிலும் இடம்பெறும் இந்தப் பகுதியை நாம் முழுமையாகப் பயன்படுத்தி சொல்லி அடிக்க வேண்டும்!

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.