இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 20, 2018

பிராப்ளம் என பயப்படாமல் இயற்பியல் பாடத்தில் சென்டம் எடுக்க ஈஸி டிப்ஸ்

இயற்பியல் பாடத்தை, ‘ஐயோ பிராப்ளமே’ என பயப்படாமல், அதுவும் நம் சப்ஜெக்டில் ஒன்றுதான், நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சப்ஜெக்ட்தான் என்ற நினைப்புடன் அதனுடன் ஃப்ரெண்டாகிவிட்டால், இயற்பியலிலும் ஈஸியா ஜெயிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுக்க இதோ சில ஈஸி டிப்ஸ்.

1. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வால்யூமிலும் சேர்த்து 10 சேப்டர்கள்தாம் இருக்கின்றன. இதில், இரண்டாம் மற்றும் ஏழாவது யூனிட்களை முழுமையாகப் படித்துவிடுங்கள். இதிலிருந்து 20 மதிப்பெண் கேள்விகள் வந்துவிடும்.

2. அடுத்து, 1, 2, 4, 7, 8 ஆகிய சேப்டர்களை ஆழமாகப் படியுங்கள். இந்த ஐந்து யூனிட்டிலிருந்து 100 மதிப்பெண் பெற்றுவிடலாம்.

3. எட்டாவது சேப்டரில் 10 மதிப்பெண் கேள்விகள் நான்கு இருக்கின்றன. இவற்றைப் படிக்க மறந்துவிடாதீர்கள். நான்கில் ஒன்று நிச்சயம் வரும்.

4. நாலாவது சேப்டரில், சுருளின் திசையளவை மாற்றுவதன் மூலம் எவ்வாறு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது, ஒரு கட்ட ஏ.சி. மின்மாற்றி, சுழல் மின்னோட்டம் மற்றும் பயன்கள், மின்மாற்றி ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளை பிராக்டீஸ் செய்யுங்கள். ஐந்தாவது சேப்டரில் வெளியீடு, உட்கவர் நிறமாலை, பட்டை அகத்துக்கான சமன்பாடு, முழு அக எதிரொளிப்பு, ராமன் விளைவு ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளைப் படியுங்கள். ஆறாவது சேப்டரில்… லேசர் பற்றிய கேள்விகள், ஜே.ஜே. தாம்சன் சோதனை, எண்ணாவது வட்டப்பாதை, ஆரத்துக்கான சமன்பாடு ஆகிய 10 மதிப்பெண் கேள்விகளையும் பிராக்டீஸ் செய்யுங்கள்.

5. இரண்டாவது வால்யூம் சிரமமாகவே இருக்காது. இந்த வால்யூமில் ஒன்பதாவது சேப்டரில் இருக்கும் மூன்று மதிப்பெண் கேள்விகள் மொத்தத்தையும் படித்துவிடுங்கள். எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் படிக்கப்போகிற மாணவர்கள் ஒன்பதாவது சேப்டரை முழுதாகப் படியுங்கள். தவிர, மற்ற சேப்டர்களில் வரும் டயகிராம்களுக்கு இரண்டு மதிப்பெண் என்றால், ஒன்பதாவது சேப்டரில் வரும் டயகிராம்களுக்கு 4 அல்லது 5 மதிப்பெண்கூட தருவோம். அந்தளவுக்கு அது முக்கியமான சேப்டர்.

6. டயகிராம்களில் பெரும்பாலும் சர்க்கியூட் சம்பந்தப்பட்டவற்றையே கேட்பார்கள்.

7. 10 மதிப்பெண் கேள்வி பதில்களில் ‘கம்பல்சரி பிராப்ளம்ஸ்’ வரும். இதில், சால்வ்டு எக்ஸர்சைஸ் அல்லது எக்ஸர்சைஸ் பிராப்ளம்களை மட்டும் பிராக்டீஸ் செய்தால் போதும்.

———–

1. சி.பி.எஸ்.சி. பிள்ளைகள் வேறு சென்டரில் எக்ஸாம் எழுதப்போவதால் புதிய சூழல், புதிய ஆசிரியர்கள் எனப் பதற்றப்படாதீர்கள். படித்ததை எழுதும் இடம் எந்த ஸ்கூலாக இருந்தால் என்ன? எந்த டென்ஷனும் தேவையில்லை. புதிய பள்ளி என்பதால், அரைமணி நேரம் முன்னதாகச் சென்றுவிடுவது நல்லது.

2. இந்தமுறை இயற்பியல் எக்ஸாமுக்கு டைம்டேபிள்படி ஒரு நாள்தான் விடுமுறை. ஸோ, பிப்ரவரி இறுதிக்குள்ளேயே கம்ப்ளீட்டாக படித்து முடித்துவிடுங்கள். அந்த ஒருநாளில் படிப்பதற்கு என்று எதையும் பெண்டிங் வைக்காதீர்கள். அந்த நாளை ரிவிஷனுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

3. மொத்தம் 15 சேப்டரில் நான்காவது முதல் பத்தாவது சேப்டர் வரை நன்கு புரிந்து படியுங்கள். பாடப்பகுதியிலிருந்து நீங்கள் அட்டெண்ட் பண்ணவேண்டிய 70 மதிப்பெண்ணில், 33 மதிப்பெண் கன்ஃபார்ம்.

4. 30 மதிப்பெண் பிராக்டிகல் தேர்வில், 2 எக்ஸ்பரிமென்ட்தான் செய்ய வேண்டும். இது மிகவும் சுலபம். 33 பிளஸ் 30 சேர்த்தால் 63 மதிப்பெண். நூற்றுக்கு 63 உங்கள் கைகளில் இருக்கிறது.

5. Higher order thinking skill என்று ரொம்பவும் டெக்னிக்கலாக 10 மதிப்பெண் கேள்விகள் வரும். இயற்பியல் பேப்பரைப் பொறுத்தவரை இந்த செக்‌ஷன் மட்டுமே கடினமாக இருக்கும்.

6. எல்லா விதிகளையும் படித்துவிடுங்கள். லென்ஸ் மேக்கர் பார்முலாவையும் படியுங்கள். நிச்சயம் வருகிற லிஸ்ட்டில் இந்தக் கேள்விகள் இருக்கின்றன. தவிர, இவற்றிலிருந்து வருகிற கேள்விகள் நேர்க்கூற்றாகவே கேட்கப்படும். அதனால் புரிந்துகொண்டு எழுதுவது சுலபம்.

7. முக்கியமான விஷயம்… சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, முந்தைய பாயின்ட்டில் சொன்னபடி சிறு வினாக்கள் மட்டும்தான் நேர்க்கூற்றாகக் கேட்கப்படும். பெருவினாக்கள் சுற்றி வளைத்துத்தான் கேட்கப்படும். உதாரணத்துக்கு, ஏ.சி. ஜெனரேட்டர் பற்றி எழுது, டி.சி. ஜெனரேட்டர் பற்றி எழுது என்று கேட்டால், கடகடவென எழுதிவிடுவீர்கள். ஆனால், இதை எப்படிக் கேட்பார்கள் தெரியுமா? மெக்கானிக்கல் எனர்ஜியிலிருந்து எலக்ட்ரிக்கல் எனர்ஜியாக மாறுகிற உபகரணத்தைப் பற்றி எழுதுங்கள் என்பார்கள். இதற்கு ஏ.சி. ஜெனரேட்டரும் டி.சி.ஜெனரேட்டரும் எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து படித்திருந்தால் மட்டுமே எழுதமுடியும்.

வாழ்த்துகள் மாணவர்களே!

– நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.