இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 03, 2018

சுதேசி இயக்கம் முதல் இந்திய பாகிஸ்தான் பிரிவு வரை.. போட்டித் தேர்வுகளுக்கும் வரலாறு முக்கியம் – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

சுதேசி இயக்கம் முதல் இந்திய பாகிஸ்தான் பிரிவு வரை.. போட்டித் தேர்வுகளுக்கும் வரலாறு முக்கியம் – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை!

#4 வெற்றிக்கோட்டைத் தொடும் வரலாறு!
முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் : இந்திய வரலாறு

பகுதி 4 – நவீன கால இந்திய வரலாறு ( Modern Indian history ) (தொடர்ச்சி)

இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான பகுதி இது! சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பாக நடந்த சமூக-மத சீர்திருத்த இயக்கங்கள் குறித்து, 1. வருடம் 2. அதன் முக்கிய தலைவர்கள் 3. முக்கிய கொள்கைகள் / சிறப்பம்சங்கள் என பிரித்து வைத்து படித்துவிடுங்கள். பிரம்ம சமாஜம் , பிரார்த்தனா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற முக்கிய இயக்கங்களும் ராஜா ராம் மோகன் ராய், கோபிந் ரானாடே, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட தலைவர்களும் இதில் அடங்குவர்.

உதாரண கேள்வி:

தியோபேண்ட் இயக்கத்தைத் துவங்கியவர் ராஜாராம் மோகன் ராய்

பிரம்ம சமாஜத்தை உருவாக்கியவர்கள் முகமது காசிம் நானோட்வி மற்றும் ரஷீது அகமது

I is correct II is wrong

II is correct I is wrong

Both are correct

Both are wrong ( பதில் )

அதேபோல் ஆங்கிலேயர் உருவாக்கிய முக்கிய சட்டங்கள், அவற்றின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இவற்றில் முக்கியமான சில -1799 ( censorship of press act ), 1835 ( licensing act) , 1857 ( licence act ) , 1867 (registration act ), 1908 ( newspaper act ), 1813-ம் ஆண்டு இயற்றப்பட்ட சார்ட்டர் சட்டம் (charter act), 1835 (மெக்காலே கல்வித் திட்டம்), 1854 (உட்ஸ் டிஸ்பாட்ச்) 1882 (ஹன்டர் கமிஷன்), 1902 (ராலேக் கமிஷன்), 1904 (யூனிவர்சிட்டி சட்டம்), 1929 (ஹர்டாக் கமிட்டி), 1944 (சார்ஜென்ட் ப்ளான்)

உதாரண கேள்வி

சட்டம் – வருடம்

சாட்லர் கமிஷன் – 1917

கோத்தாரி கமிட்டி – 1964

வர்தா கல்வி திட்டம் – 1937

இவற்றில் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது

1,2,3 ( பதில் )

1 only

2,3

2 only

இனி கிளைமாக்ஸுக்கு வருவோம். மிக முக்கியமான விஷயம், சுதந்திர போராட்டத்துக்குத் தேவையான காரணங்கள், அந்த நேரத்தில் இருந்த முக்கிய அரசியல் இயக்கங்கள், இந்திய தேசிய காங்கிரஸ் (INC ) உருவாக்கம், மிதவாதிகள் (moderates ), தீவிரவாதிகள் (extremists) ஆகியவற்றைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ளுங்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாடுகள் எங்கெல்லாம் நடத்தப்பட்டன? அங்கு என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன? அதற்குத் யார் தலைமை வகித்தவர்கள் யார் என்பன போன்ற தகவல்களை ஒரு டேபிள் உருவாக்கிப் படித்துக்கொள்வது அவசியம்.

உதாரண டேபிள்

———————–

வருடம் இடம் தலைவர் முக்கிய முடிவுகள்

1887 மெட்ராஸ் பத்ருதின் தியாப்ஜே என்ற இஸ்லாமியர் முதல்முறையாக தலைமை வகித்தார்

1917 கல்கத்தா அன்னி பெசன்ட் தலைமை வகித்தார்

———————–

மிதவாதிகள் யார் யார்? அவர்களுடைய கொள்கைகள் என்ன? தீவிரவாதிகள் யார் யார் என்னென்ன கொள்கைகளை உடையவர்கள் என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்புகளாக எடுத்துக்கொள்ளுங்கள் – இவை அனைத்தும் மிக மிக முக்கியம். இதுவரை வரலாற்றில் பார்த்தது எல்லாம் கூட்டு, பொறியல், சாம்பார், ரசம்தான். முக்கியமான ஐட்டம் – சோறு ! இப்போது வருவது- அவற்றில் சில – பார்ட்டிஷன் ஆஃப் பெங்கால் (1905), சுதேசி இயக்கம் (1905), சூரத் பிரிவு (1907), முஸ்லிம் லீக் துவக்கம் (1906 ), இந்திய கௌன்சில் சட்டம் (1909), கதர் இயக்கம் துவக்கம் (1913), லக்னோ உடன்பாடு (1916), ஹோம் ரூல் இயக்கம் (1916), காந்தியடிகளின் வருகை (1915), சம்பரண் சத்யாகிரகம் ( 1917 ), அகமதாபாத் மில் போராட்டம் (1918), கேதா சத்யாகிரகம் (1918), இந்திய அரசு சட்டம் (1919) – மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள், ரௌலட் சட்டம் (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919), கிலாபத் இயக்கம் (1919), ஒத்துழையாமை இயக்கம் (Non co operation movement – 1920) ஸ்வராஜ்ஜிய இயக்கம், பர்தோலி சத்யாகிரகம், சைமன் கமிஷன் (1927), நேரு அறிக்கை (1928), ஜின்னாவின் 14 முடிவுகள் (1929), சிவில் டிஸ் ஒபீடியன்ஸ் இயக்கம் (1930), காந்தியின் 11 முடிவுகள் , தண்டி யாத்திரை (1930), காந்தி – இர்வின் உடன்பாடு(1931), 3 வட்ட மேசை மாநாடுகள் (1930, 1931 ,1932), பூனா உடன்படிக்கை (1932), இந்திய அரசு சட்டம் (1935), ஆகஸ்டு சலுகை (August offer – 1940) , கிரிப்ஸ் மிஷன் (1942), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942), போஸ் வருகை, இந்திய தேசிய ராணுவத்தின் துவக்கம், ராஜாஜி ஃபார்முலா (1944), தேசாய் – லியாகத் திட்டம் (1945), வேவல் திட்டம் (1945), காந்தி-ஜின்னா பேச்சு வார்த்தை (1944), கடற்படை புரட்சி (1946), கேபினட் மிஷன் (1946), அரசியல் நிர்ணய சபை (constituent assembly ) உருவாக்கம், மவுண்ட்பேட்டன் திட்டம் (1947), இந்திய விடுதலை சட்டம் (1947), இந்திய பாகிஸ்தான் பிரிவு – இவை அனைத்தையும் எப்போது கேட்டாலும் சொல்வது போல தயார் செய்துகொண்டால், UPSC , TNPSC என எந்தத் தேர்விலும் சொல்லி அடிக்கலாம்!

இதுதவிர, அனைத்து ஆங்கிலேய முக்கிய கவர்னர் ஜெனரல்கள், வைஸராய்கள், அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், குறிப்பாக சற்று பிரபலம் குறைவானவர்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நாம் பார்த்த பகுதியில் மட்டும் குறைந்தது 4-5 சதவிகித கேள்விகள் முதல் 10 சதவிகித கேள்விகள் வரை இடம் பெற்றிருக்கின்றன. ஆக, இந்தப் பகுதி எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். இதுதான் முக்கியம் என்று தெரிந்தாலே போதும், வெற்றிக் கோட்டில் பாதியைத் தொட்டுவிட்டது போலத்தான்.

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.