இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

March 27, 2018

டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை…! – போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? – 1

டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

கோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.

நம் கண் முன்னாடியே எவ்வளவு வாய்ப்புகள்!  இந்த ஆண்டு மட்டும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  திறமை, உழைப்பு, விடாமுயற்சி என வெற்றிக்குத் தேவையான எவ்வளவு நல்ல குணங்கள் நம்மிடம் இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்கொண்டு அதைப் பயன்படுத்தும்விதமே நம்மை சாமானியர்களிடமிருந்து பிரித்து சாதனையாளராக மாற்றுகிறது. வெற்றி என்பது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதேசமயம் தோல்வி என்றாலே இயல்பாகவே நடுக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. தோல்வியை மற்றுமொரு ரிசல்ட்டாக மட்டும் பார்க்காமல் பயமாக பார்ப்பது நாம் அறியாமலேயே நம்முடைய அடுத்தடுத்த வெற்றி வாய்ப்புக்களைப் பெரிதும் பாதிக்கிறது. தோல்வி என்பது நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான். அந்த தோல்வி கற்றுத்தரும் ஒவ்வொரு பாடத்தையும் சரிவர ஆராய்ந்து, அதிலிருந்து வெற்றிக்கான வழிமுறைகளை உருவாக்கும் ஒருசிலர்தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.

நம்ம வேலையை நாம் நேர்மையாக செய்துதான் ஒவ்வொரு தேர்வுக்கும் தயாராகிறோம். ஆனால், அதன் வழிமுறைகளும் வியூகங்களும் சரியானவைதானா என சோதித்துப் பார்க்க நல்ல வழிகாட்டிகள் தேவை. ‘நீ பிடுங்கிறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்’ என சொல்வதற்கும் ஒருத்தர் வேண்டும். அப்படி தேர்வுகளுக்குத் தயாராகும் வழியில் தடுக்கிவிழாமல் நம்மை வழிநடத்தும் நபரோ, புத்தகமோ அல்லது இணையதளமோ – எல்லாமே நமக்கு வழிகாட்டிகள்தான். இதோ போட்டித்தேர்வுகளில் நீங்கள் ஜெயிப்பதற்கு உதவும் வழிகாட்டிகள் இவைதான்..!

————-

தமிழ் நாட்டில் இந்த ஓராண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் பத்தாயிரம் உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடக்க இருக்கின்றன. அதில், தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கான (Assistant Director horticulture) 130 பணியிடங்கள், நூலகருக்கான (librarian) 33 பணியிடங்கள், உதவி பொறியாளர்களுக்கான (Assistant engineer) 147 பணியிடங்கள், குரூப் 4 (group IV) மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (junior assistant) நில அளவையர் (field surveyor), தட்டச்சர் (typist), வரைவாளர் (draftsman) என 9,351 பணியிடங்கள், செயல் அலுவலருக்கான (executive officer) 4 பணியிடங்கள், குரூப் 1 ( group I) மூலம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் உட்பட 60-80 பணியிடங்கள், குரூப் 2 (group 2) மூலம் வருவாய் ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், சார் பதிவாளர் உட்பட சுமார் 1,200 பணியிடங்கள், தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளருக்கான (assistant engineer) 325 பணியிடங்கள் – இவை அனைத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழ் நாட்டில் இந்த ஓராண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் பத்தாயிரம் உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடக்க இருக்கின்றன. அதில், தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கான (Assistant Director horticulture) 130 பணியிடங்கள், நூலகருக்கான (librarian) 33 பணியிடங்கள், உதவி பொறியாளர்களுக்கான (Assistant engineer) 147 பணியிடங்கள், குரூப் 4 (group IV) மூலம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (junior assistant) நில அளவையர் (field surveyor), தட்டச்சர் (typist), வரைவாளர் (draftsman) என 9,351 பணியிடங்கள், செயல் அலுவலருக்கான (executive officer) 4 பணியிடங்கள், குரூப் 1 ( group I) மூலம் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் உட்பட 60-80 பணியிடங்கள், குரூப் 2 (group 2) மூலம் வருவாய் ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், சார் பதிவாளர் உட்பட சுமார் 1,200 பணியிடங்கள், தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளருக்கான (assistant engineer) 325 பணியிடங்கள் – இவை அனைத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

‘இதெல்லாம் வேண்டாம் சார்…ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான்’ ன்னு நினைக்கிறவங்களுக்கு இருக்கவே இருக்கிறது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். இந்த ஆண்டு IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்படி மேலே குறிப்பிடப்படும் ஒவ்வொன்றையும் பணியிடங்களாகவும் தேர்வுகளாகவும் மட்டும் பார்க்காமல் ஒவ்வொன்றையும் நம் வாழ்க்கையையே சூப்பராக மாற்றப்போகும் ஒரு வாய்ப்பாகப் பார்த்தால்? நம் கண் முன்னாடியே எவ்வளவு வாய்ப்புகள்! திறமை, உழைப்பு, விடாமுயற்சி என வெற்றிக்குத் தேவையான எவ்வளவு நல்ல குணங்கள் நம்மிடம் இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்கொண்டு அதைப் பயன்படுத்தும்விதமே நம்மை சாமானியர்களிடமிருந்து பிரித்து சாதனையாளராக மாற்றுகிறது. வெற்றி என்பது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதேசமயம் தோல்வி என்றாலே இயல்பாகவே நடுக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. தோல்வியை மற்றுமொரு ரிசல்ட்டாக மட்டும் பார்க்காமல் பயமாக பார்ப்பது நாம் அறியாமலேயே நம்முடைய அடுத்தடுத்த வெற்றி வாய்ப்புக்களைப் பெரிதும் பாதிக்கிறது. தோல்வி என்பது நாம் அனைவரும் சந்திக்கும் ஒன்றுதான். அந்த தோல்வி கற்றுத்தரும் ஒவ்வொரு பாடத்தையும் சரிவர ஆராய்ந்து, அதிலிருந்து வெற்றிக்கான வழிமுறைகளை உருவாக்கும் ஒருசிலர்தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.

போட்டித் தேர்வுகளைப் பற்றி ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், போட்டித்தேர்வுகளை எழுதுவது என்பது ரங்கநாதன் தெருவில் தீபாவளி நேரத்தில் ஷாப்பிங் செல்வது போலத்தான். ‘நம்மகிட்ட எவ்வளவு காசு இருக்கு, நம்ம தேவைகள் என்னென்ன? நமக்குத் தேவையான பொருள்கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும்?’ என்ற சரியான திட்டமிடுதலுடன் நாம் பொருள்களை வாங்கச் சென்றால், நினைத்ததை உரிய நேரத்தில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பலாம். அதுவே எந்தவொரு திட்டமிடுதலும் இல்லாமல், ‘இதுதான் எனக்குத் தேவை’ என்ற குறிக்கோளும் இல்லாமல், ‘கடைக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம்’, ‘அங்க போய் முடிவு பண்ணிக்கலாம்’ என்கின்ற எண்ணத்தோடு போனால், எதுவுமே சரியாக வாங்க முடியாமல், கூட்டத்தோடு கூட்டமாக, கடை கடையாக ஏறியே பெரும்பாலான நேரத்தை வீணடிக்க நேரிடும். அதேபோலத்தான் நம்முடைய போட்டித்தேர்வுகளும். ரங்கதாதன் தெருவில் உள்ள கடைகளைப் போல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்க வேண்டியது வரும். நமக்கு எந்தத் தேர்வு பொருத்தமானது; அந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என சரிவர திட்டமிடாமல் விட்டுவிட்டால் நாமும் கூட்டத்தோடு கூட்டமாக தேர்வு தேர்வாக ஏறி இறங்க வேண்டியதுதான்.

கூட்டம் என்று சொல்லும்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. “இந்தப் போட்டித்தேர்வை 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள், 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். நாமெல்லாம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இத்தனை பேர் எழுதுற தேர்வுல நாமெல்லாம் எங்க பாஸ் ஆகப் போகிறோம்?’ என்ற எண்ணத்தை வளர்க்காதீர்கள். உதாரணத்துக்கு 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் missed call கொடுத்து கட்சில சேர்ந்துட்டு அதன்பிறகு ‘அப்பீட்’ ஆவதுபோல் விண்ணப்பம் மட்டும் செய்து விட்டு தேர்வுக்கே வராதவர்களின் எண்ணிக்கையே சுமார் 40 சதவிகிதத்தைத் தொடும். ‘சரி நாமும் எழுதிப் பார்க்க வேண்டியதுதான்’ என்ற எண்ணத்தோடு வந்து தேர்வு எழுதுவோர் சுமார் 30 சதவிகிதம். மீதமிருக்கும் 30 சதவிகிதத்தினரால் சரியான வழிகாட்டுதல் மற்றும் திட்டத்தோடு தேர்வில் வந்து அமர்வோர் எண்ணிக்கை சுமார் 15 சதவிகிதம்தான். ஆக இந்த 15 சதவிகிதத்தினருடன்தான் நமக்குப் போட்டி. தேர்வுக்குத் தயாராகும் வியூகங்களையும் முயற்சிகளையும் சரிவர செய்து நம் இலக்கை மட்டுமே நோக்கி பயணித்தால் இந்த 15 சதவிகிதத்தினரைப் பற்றிக்கூட கவலைப்படத் தேவையில்லை.

நம்ம வேலையை நாம் நேர்மையாக செய்துதான் ஒவ்வொரு தேர்வுக்கும் தயாராகிறோம். ஆனால், அதன் வழிமுறைகளும் வியூகங்களும் சரியானவைதானா என சோதித்துப் பார்க்க நல்ல வழிகாட்டிகள் தேவை. ‘நீ பிடுங்கிறதெல்லாமே தேவையில்லாத ஆணிதான்’ என சொல்வதற்கும் ஒருத்தர் வேண்டும். அப்படி தேர்வுகளுக்குத் தயாராகும் வழியில் தடுக்கிவிழாமல் நம்மை வழிநடத்தும் நபரோ, புத்தகமோ அல்லது இணையதளமோ – எல்லாமே நமக்கு வழிகாட்டிகள்தான். நம் அனைவருக்குமே வருங்காலத்தைப் பற்றிய பல ஆசைகளும் கனவுகளும் நிச்சயம் இருக்கும். ‘எங்க ஏரியாவில் தெரு விளக்கு சரியாக எரியல, ரோடு குண்டும் குழியுமா இருக்கு’ என ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆதங்கப்பட்டிருப்போம். நம்முடைய நிலத்துக்குப் பட்டா வாங்க எதுக்கு காசு கொடுக்க வேண்டும் என பலமுறை போராடியிருப்போம். இதையெல்லாம் சரி செய்யும் இடத்தில் நாமே இருந்தால்…? ஆம், நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அந்த நேரம் வந்துவிட்டது. நம் லட்சியங்களுக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பும் வந்துவிட்டது.

அவசியமான 5 யுக்திகள்:

1. ஒருநாளில் நீங்கள் என்னவெல்லாம் படிக்கப் போகிறீர்கள் என்பதற்கான தெளிவான அட்டவனையை அமைத்துக்கொள்ளுங்கள். அதிகமான பாடங்களை அட்டவனையில் ஏற்றி, உங்கள் பளுவை அதிகரித்து உங்களுக்கு நீங்களே அழுத்தத்தைத் தந்துவிட வேண்டாம். ஒருநாளில் நம்மால் எவ்வளவு படிக்க முடியுமோ அந்த அளவு பாடங்களை மட்டுமே அட்டவனையில் சேருங்கள். இந்த ஒருநாள் அட்டவணைகளை வைத்து அந்தந்த வாரத்துக்கும் மாதத்துக்குமான அட்டவணைகளையும் அமைத்துக்கொள்ளுங்கள் – அது உங்கள் இலக்குகளுக்கு சரியான வடிவத்தை நிச்சயம் அமைத்துத் தரும்.
2. படித்த பாடங்களை படித்ததோடு விட்டுவிடாமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்து பார்ப்பது அவசியம். எந்த அளவு நாம் படித்ததை நினைவு கூர்ந்து பார்க்கிறோமோ அந்த அளவுக்குப் பாடங்கள் நம் மனதில் பதியும். டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போதோ, நம் அம்மாவின் தோசைக்காக காத்திருக்கும்போதோ கிடைக்கும் சிறுசிறு இடைவேளைகளில் நாம் படித்தவற்றை நினைவு கூர்ந்து பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டால் தேர்வில் நிச்சயம் கை கொடுக்கும்.
3. ‘நாம் எந்த அளவு படித்திருக்கிறோம்?’ ;’ எந்த இடத்தில் தவறவிடுகிறோம்?’ என்பதற்கான அளவுகோள் நாம் எழுதும் தேர்வுகள்தான். நம்மிடம் இருக்கும் மாதிரி கேள்விகளை வைத்து நாமே வீட்டில் தேர்வுகளை எழுதி மதிப்பீடு செய்து பார்ப்பது நமக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு 100 கேள்விகள் என்றால், 10 நாள்களுக்கு 1000 கேள்விகள். மாதத்துக்கு 3,000 கேள்விகள் என தேர்வை சந்திக்கும் முன்னரே சுமார் 15,000 கேள்விகளை நாம் சந்தித்து பயிற்சி பெற்றிருப்போம்.
4. எப்போதும் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி அப்டேட்டடாக இருப்பது மிக முக்கியம். அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் முக்கிய செய்திகளை – தேர்வுக்கு தேவையானவை மட்டும் குறிப்புகளாக சேகரித்து வைத்தால் தேர்வுக்கு முன் திருப்பிப் பார்ப்பது எளிதானதாக இருக்கும்.
5. படிப்புக்காக ஒதுக்கும் நேரத்தைப் போல் நம் உடலையும் மனத்தையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்காகவே நேரம் ஒதுக்குவது மிக அவசியம். எப்போது முடியும் என்றே தெரியாத பல நாள்களுக்கான தேர்வுகளை மேற்கொள்ளும்போது உடலும் மனமும் உற்சாகத்தோடு இருந்தால்தான், தேர்வுக்கான பயணமும் இனிமையானதாக அமையும்!

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.