இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 20, 2018

உயிரியல் பாடத்தில் சென்டம்… எப்படி பெறுவது..?!

படம் வரையத் தெரிந்த மாணவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் பயாலஜி. ஆனால், இந்த சப்ஜெக்டில் சென்டம் எடுப்பது கடினமாக இருக்கும்.

1. ”பிராக்டிகலைப் பொறுத்தவரை, மாணவர்களை எழுதவைத்து, ரெக்கார்டு சப்மிட் செய்யவைத்து, வைவா கேட்டு என 50 மதிப்பெண் வாங்கவைத்து விடுவோம். மீதமிருக்கிற 150 மதிப்பெண்தான் மாணவர்களின் டாஸ்க்.

2. தாவரவியலில் 10 மார்க் கேள்விகள் முதல் சேப்டரிலிருந்து ஒன்று, இரண்டாம் சேப்டரிலிருந்து ஒன்று, நான்கு மற்றும் ஐந்தாவது சேப்டரில் ஒன்று என 4 கேட்கப்படும். இதில் இரண்டுக்கு பதில் எழுத வேண்டும். அதனால், மேலே சொன்ன நான்கு சேப்டர்களின் 10 மார்க் கேள்விகளை நன்கு படித்துவிடுங்கள்.

3. விலங்கியலில் 10 மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, முதல் சேப்டரிலிருந்து இரண்டு, ஐந்தாவது சேப்டரிலிருந்து ஒன்று, ஆறாவது சேப்டரிலிருந்து ஒன்று என 4 கேள்விகள் கேட்கப்படும். இதில் இரண்டுக்கு பதில் எழுத வேண்டும்.

4. டயகிராமுடன் எழுத வேண்டிய 10 மார்க் கேள்விக்கு படத்துக்கு 4 மார்க், பதிலுக்கு 6 மார்க் எனப் பிரித்து வழங்கப்படும். 5 மார்க் அல்லது 3 மார்க் டயகிராம் கேள்விகளில், படம் வரைந்து பாகம் குறிக்க மட்டுமே கேட்கப்படும்.

6. விலங்கியலில், 1,2,3,4,7 ஆகிய சேப்டர்களில் தலா ஒரு கேள்வி என 5 கேள்விகள் வரும். இதில் 3-க்கு பதில் எழுதினால் போதும். இந்த 3 கேள்விகளில் சேப்டர் 3-ல் இருக்கிற நோய்த்தடுப்க் காப்பியல் பற்றிய கேள்வி நிச்சயம் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துவிட்டது.

இதேபோல, தாவரவியலில் 5 மார்க் கேள்விகளில் பெந்தம் & ஹூக்கர் வகைப்பாட்டின் நிறைகள், ஹெர்பேரியத்தின் முக்கியத்துவம், அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டுதலின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை நன்கு படித்துவிடுங்கள். இவை கேட்கப்பட்ட அதிக வாய்ப்புகள் கேள்விகள்.

7. 3 மார்க் கேள்விகளில் முழு மதிப்பெண் வாங்க, தாவரவியல் மற்றும் விலங்கியலில் 1,2,3,4,5,6 ஆகிய பாடங்களில் இருக்கிற 3 மார்க் கேள்விகள் அனைத்தையும் மனனம் செய்துவிடுங்கள். வேறு வழியில்லை.

8. தாவரவியலில் 14, விலங்கியலில் 16 என 30 ஒரு மார்க் கேள்விகள் வரும். இதற்கு நோ சாய்ஸ். பாடங்களின் பின் பகுதியில் இருக்கிற ஒன் வேர்டு கேள்விகளை மட்டும் படித்தால் போதவே போதாது. அத்தனை பாடங்களையும் வரிக்கு வரி ஆழ்ந்து படித்தால் மட்டுமே இந்த 30 மார்க்கையும் வாங்க முடியும். சிரமமாக உணர்பவர்கள், 2006-2017 வரையிலான கேள்வித்தாள்கள் அத்தனையையும் ரிவிஷன் செய்துவிடுங்கள். பயாலஜியில் பல மாணவர்கள் சென்டமை கோட்டை விடுவதற்குக் காரணம் இந்த ஒன் வேர்ட்ஸ்தான் என்பதால், கூடுதல் கவனம் மாணவர்களே.”

5. தாவரவியல் 5 மார்க் கேள்விகளில், 1,2,3,4,6 ஆகிய ஐந்து சேப்டர்களில் தலா ஒரு கேள்வி, 5-வது சேப்டரில் 2 என, ஏழு கேள்விகள் கேட்கப்படும். இதில் 4 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். இந்தக் கடைசி நேரத்தில் படிக்கச் சிரமப்படுபவர்கள் சேப்டர் 6-ஐ மட்டும் விட்டுவிடலாம்.

—————

1. சிபிஎஸ்இ, ஸ்டேட் போர்டு என்று எந்த சிலபஸில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், நீட் எக்ஸாம் எழுதவிருப்பவர்கள் உங்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயாலஜி பாடத்தை வரிக்கு வரி படியுங்கள். எந்த சேப்டரையும் மிஸ் செய்யக் கூடாது.

2. பயாலஜி கேள்வித்தாளை பயோடெக் படித்தவர்கள் தயார் செய்திருந்தால், அது சம்பந்தப்பட்ட கேள்விகள்தாம் அதிகம் வரும். இதுவே தாவரவியல் படித்தவர்கள் தயார் செய்திருந்தால் அது சம்பந்தப்பட்ட கேள்விகள்தாம் அதிகம் வரும். எனவே, எந்த சேப்டரிலிருந்து அதிகபட்ச கேள்விகள் வரும் என்று கணிக்கவே முடியாது. என்றாலும், மாணவர்கள் சென்டம் ஸ்கோர் செய்ய இரண்டு சுலபமான வழிகளை என்னால் சொல்ல முடியும்.

ஒன்று, மொத்தப் பாடப் புத்தகத்திலும் 126, ஐந்து மார்க் கேள்விகள் இருக்கின்றன. இதை மொத்தமும் படித்துவிட்டால், 5 மதிப்பெண் கேள்விகளை மட்டுமல்ல 3 மார்க், 2 மார்க், ஒரு மார்க் என அனைத்தையும் அட்டெண்ட் பண்ணிவிடலாம்.

இரண்டு, டயகிராமுடன் வருகிற 5 மார்க் கேள்விகளை மிஸ் பண்ணாமல் படித்துவிடுங்கள். டயகிராம் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அரை மார்க்கூட கை நழுவிப்போகாமல் மொத்தமாகக் கிடைத்துவிடும்.

3. ஒரு மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, பல மாணவர்களால் 50% மார்க்தான் எடுக்கமுடிகிறது. ஏனென்றால், ஒன் வேர்டை பொறுத்தவரை கேள்விகளை நேரிடையாக கேட்கவே மாட்டார்கள். சவுத் இண்டியன் ஆசிரியர்கள் கேள்வித்தாளை தயார் செய்திருந்தால் கேள்விகள் நேரிடையாக வரும். இதுவே நார்த் இண்டியன் ஆசிரியர்கள் கேள்வித்தாளை தயார் செய்திருந்தால் கேள்விகள் டிவிஸ்ட்டட் ஆகத்தான் வரும். எனவே, மாணவர்கள் கேள்விகளைப் புரிந்துகொண்டால் மட்டும்தான் ஒன் வேர்டில் முழு மதிப்பெண்ணையும், மொத்தத்தில் 100% மதிப்பெண்ணும் பெற முடியும்.

– நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.