இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

July 04, 2018

உலக வரைபடத்தில் இதையெல்லாம் நோட் பண்ணுங்க..! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

உலக வரைபடத்தில் இதையெல்லாம் நோட் பண்ணுங்க..! – டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
#13 முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் – பொது, உலகப் புவியியல் -2

போட்டித் தேர்வுகளில் நமது துருப்புச் சீட்டாக பயன்படக்கூடிய புவியியலின் இறுதி பகுதிக்கு வந்துள்ளோம். முதலாவராக, பூமியின் காற்று மண்டலத்தைப் ( Atmosphere) பார்ப்போம். மிக அதிகப்படியான சதவிகிதத்தில் ( 78.08 %) உள்ள நைட்ரஜன்(Nitrogen) முதல் மிகக்குறைந்த சதவிகிதத்தில் ( 0.00005%) உள்ள ஹைட்ரஜன் ( Hydrogen) வரை காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் பட்டியலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சேர்த்து காற்று மண்டலத்தின் பல்வேறு அடுக்குகளான ட்ரோப்போஸ்பியர் ( Troposphere), ஸ்ட்ரேட்டோஸ்பியர் ( Stratosphere), மீசோஸ்பியர் ( mesosphere), ஐயனோஸ்பியர் ( Ionosphere) ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல, காற்று மண்டலத்தில் உள்ள காற்றழுத்தம், காற்றழுத்தம் உருவாகும் விதம், பூமியின் பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்விதம் ஆகியவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தலைப்பில் உள்ள துறைச்சொற்கள் (terminologies ) மிக மிக முக்கியம்.

உதாரண சொற்கள் : சைக்லோன் ( cyclone ), ஆண்டி சைக்லோன் ( anti cyclone ), கோரியோலிஸ் ஃபோர்ஸ் ( coriolis force ), ஃபெர்ரெல்ஸ் ( Ferrells ) விதி, வெஸ்டர்லீஸ் ( westerlies ). அதேபோல, ஒவ்வொரு இடத்திலும் அங்கு வீசக்கூடிய காற்றழுத்தம் மற்றும் காற்று வகைகளின் பெயர்கள் மிக முக்கியம்.

உதாரண கேள்வி:

Statement I: மிஸ்ட்ரல் ( mistral ) என்பது ஸ்பெயின் ( Spain) மற்றும் பிரான்ஸ் ( France ) நாடுகளில் வீசும் குளிர்காற்றின் பெயர்
Statement II: சிரோக்கோ (sirocco ) என்பது சீனாவில் துவங்கி ஐரோப்பா ( Europe ) வரை வீசும் காற்றினைக் குறிக்கும்

1 is correct ( பதில் )
2 is correct
Both are correct
Both are wrong

சிரேக்கோ (sirocco ) என்பது சஹாரா பாலைவனத்தில் துவங்கி ஐரோப்பா ( Europe ) வரைவீசும் காற்றினைக் குறிக்கும்.

அடுத்ததாக, நாம் பார்க்கப்போகும் தலைப்பு மழை. ஜெட் ஸ்ட்ரீம்கள் ( jet streams ) – அதாவது நீளமான, குறுகிய அதிவேகத்தில் பாயக்கூடிய காற்றுக்கான சிறப்புப் பெயர், எல் நினோ ( EL Nino) மற்றும் லா நீனா ( La Niña) ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். புயல் – அதன் வகைகள் 1. டெம்பரேட் ( temperate ) புயல்கள் – பெரும்பாலும் வடக்கு மற்றும் தெற்குத் துருவத்திலிருந்து உருவாகும் 2. டிராப்பிக்கல் (tropical) புயல்கள் – டிராப்பிக் ஆஃப் கேன்சர் (Tropic of Cancer) மற்றும், டிராப்பிக் ஆஃப் கேப்ரிக்கார்ன் ( Tropic of Capricorn ) ஆகிய இரண்டுக்கும் நடுவில் உருவாகும் புயல்களை டிராப்பிக்கல் புயல்கள் எனலாம். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்தப் புயல்களின் மற்ற அம்சங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு எழுதும் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்படும் அனைத்து புயல்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைப்பு, உலக அளவிலான காலநிலை மற்றும் தட்ப வெப்பம், அதன் வகைகள் 1. ஈக்வடோரியல் (equatorial climate), 2. டிராபிக்கல் சவானா ( Tropical Savanna climate), சுடான் வகை ( Sudan type ) 3. டிராப்பிக்கல் மான்சூன் ( tropical monsoon climate ) 4. டிராப்பிக்கல் சப்-டிராப்பிக்கல் டெசர்ட் ( tropical/ sub tropical desert climate ) 5.மெடிட்டெரேனியன் ( Mediterranean climate ) 6. ஸ்டெப்பீ வகை ( steppe type climate ) 7. சப்-டிராப்பிக்கல் ஹியூமிட் ( sub tropical humid climate ) 8. கூல் டெம்பரேச்சர் பிரிட்டிஷ் வகை ( cool temperature British type ) 9. கூல் டெம்பரேட் காண்டினெண்டல் (cool temperate continental) 10. கூல் டெம்பரேட் ஈஸ்டர்ன் மார்ஜின் (cool temperate eastern margin) 11. ஆர்டிக் / போலார் வகை (Arctic / போலார் வகை) என மேலே கூறிய அனைத்து வகைகளும் உலகின் எந்தெந்த இடங்களுக்குப் பொருந்தும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் – பெரும்பாலும் இடங்களை ஒட்டித்தான் கேள்விகள் வரும்.

அடுத்த தலைப்பு கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் குறித்தவை. உலகில் உள்ள அனைத்து கடல்கள், பெருங்கடல்கள் ஆகியவை உள்ள உலக வரைபடத்தை எடுத்துக் கொன்டு அனைத்தையும் கண்களால் ஸ்கேன் செய்து மனதில் ஏற்றுங்கள். அதேபோலத்தான் உலக நதிகளும் ஏரிகளும். கண்டம் வாரியாக, நாடுவாரியாக சிறியது, பெரியது என அனைத்துத் தகவல்களையும் பட்டியலிட்டுப் படித்துவிடுங்கள். இந்தியாவின் நீராதாரங்களைப்போல உலக நீராதாரங்களைப் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது தேர்வுக்கு மிக அவசியமான ஒன்று.

உதாரண கேள்வி:

Statement I : அமேசான் நதி ஆண்டஸ் மலைப்பகுதியில் தொடங்குகிறது
Statement II : டைக்ரிஸ் நதி ஈரான் வழியாக செல்கிறது
Statement III : ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஜிப்ரால்டர் ( strait of Gibraltar) மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு நடுவில் உள்ளது

1 only is correct
1 and 3 are correct ( பதில் )
1 and 2 are correct
All are correct

டைக்ரிஸ் நதி ஈராக், துருக்கி மற்றும் சிரியா வழியாகச் செல்கிறது.

இந்திய வரைபடத்தைப் பற்றி முந்தைய வாரங்களில் சொன்னதுபோல, உலக புவியியலுக்காக உலக வரைபடங்களைத் தலைப்புவாரியாக வாங்கியோ அல்லது வரைந்தோ வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உலகத்தை ஒரு ‘ரவுண்டு’ போய்வாருங்கள். உலக புவியியல் எவ்வளவு எளிது என்பதை நீங்களே உணர்வீர்கள்!

— நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.