இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

December 31, 2022

2023 நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கின!

நெட் தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடத்தப்படும். கணினி வழியாக நடத்தப்படும் இத்தேர்வுகள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடக்கும்.

இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாக ‘நெட்’ (NET – National Eligibility Test) தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய முடியும்.

தற்போது 2023-ம் வருட நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 29 வியாழன் மாலை 5 மணியளவில் தொடங்கியுள்ளது. நெட் தேர்வை எழுத விரும்புபவர்கள், அதிகாரபூர்வ வலைதளமான https://ugcnet.nta.nic.in/ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான தளம் டிசம்பர் 29 தொடங்கி, 2023- ஜனவரி 17-ம் தேதி வரை இருக்கும். நெட் தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடத்தப்படும். கணினி வழியாக நடத்தப்படும் இத்தேர்வுகள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடக்கும்.

முதல் ஷிஃப்ட், காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிஃப்ட் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டிருக்கும். இரண்டிலும் அப்ஜெக்டிவ் வடிவ கேள்விகள் இருக்கும். விண்ணப்பதார்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வினாத்தாள் கிடைக்கும்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.