இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 02, 2019

புகன்றான் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

1. தமிழில் தோன்றிய முதல் நிகண்டு எது?
A) பிங்கல நிகண்டு
B) உரிச்சொல் நிகண்டு
C) திவாகரம்
D) சூடாமணி நிகண்டு

2. சுடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A) சுட்ட
B) சுடுதல்
C) சூடு
D) சுட்டான்

3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
A) துறைமுகம், தளிர், திரை, தாமரை, தீமை
B) தீமை, துறைமுகம், திரை, தளிர், தாமரை
C) தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
D) தாமரை, தீமை, துறைமுகம், தளிர், திரை

4. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை – அளை.
A) கூப்பிடு – தயிர்
B) நத்தை – சேறு
C) துன்பம் – சோறு
D) கடல் – பாம்புப்புற்று

5. ஆறாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
A) சென்னை
B) கோலாலம்பூர்
C) யாழ்ப்பாணம்
D) மொரீசியஸ்

6. தவறாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
A) இசை மணி – சீர்காழி கோவிந்தராசன்
B) இசை அரசர் – தண்டபாணி தேசிகர்
C) பண்ணாராய்ச்சி வித்தகர் – விபுலானந்த அடிகள்
D) இசை சித்தர் – சிதம்பரம் ஜெயராமன்

7. பெண்களுக்காக நடத்தப்பட்ட முதல் இதழ்
A) மங்கையர் மலர்
B) அமிர்தவசனி
C) சுகுணாபோதினி
D) பத்மஜோதி

8. தத்தளித்து நின்ற தமிழ் நாடகத்தாய்க்குப் புத்துயிர் அளித்த புண்ணியவான் என்று பம்மல் சம்பந்தனாரைப் புகழ்ந்தவர் யார்?
A) நாமக்கல்லார்
B) அண்ணா
C) கவிமணி
D) பட்டுக்கோட்டையார்

9. பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொண்ட ஆழ்வார் யார்?
A) நம்மாழ்வார்
B) பேயாழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) திருமங்கையாழ்வார்

10. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு – முறுகு.
A) அவயம் – நோக்குதல்
B) அழகு – முதிர்தல்
C) பழகு – சேர்த்தல்
D) இன்பம் – பார்த்தல்

11. உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – கடன் பட்டார் நெஞ்சம் போல்
A) ஆதரவு
B) ஏமாற்றம்
C) வேதனை
D) பகை

12. புகன்றான் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A) புகன்
B) புகல்
C) புகு
D) புக

13. தாண்டகம் பாடிய ஆழ்வார் யார்?
A) நம்மாழ்வார்
B) பேயாழ்வார்
C) பூதத்தாழ்வார்
D) திருமங்கையாழ்வார்

14. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் யார்?
A) மண்டலபுருடர்
B) ரேவண சித்தர்
C) காங்கேயர்
D) கால்டுவெல்

15. அகராதி என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் யார்?
A) மண்டலபுருடர்
B) ரேவண சித்தர்
C) குணசாகரர்
D) கால்டுவெல்

16. மா – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A) சிறிய
B) குறுகிய
C) பெரிய
D) அம்மா

Answers
1. C
2. B
3. C
4. D
5. B
6. C
7. B
8. C
9. C
10. B
11. C
12. B
13. D
14. D
15. B
16. C

எதாவது பிழைகள் மற்றும் விடைகளில் தவறுகள் இருந்தால் KalviApp@gmail.com-ல் தெரிவித்து மற்றவைகள் சரியான விடையை அறிய உதவி செய்யவும்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.