இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 18, 2019

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்பு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்பு

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா – விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ! அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது !

http://www.tnscert.org/webapp2/xiimodelanskey.aspx

Copyright © 2023 KalviApp. All rights reserved.