இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

February 20, 2018

வேதியியல் பாடத்தில் சென்டம் எடுப்பது சுலபம்தான்!

வேதியியல் என்றால், ஏதோ வேற்றுக்கிரகத்துக்கு பாஷைபோல முழிப்பவர்களுக்கு மத்தியில்தான், அந்தப் பாடத்திலும் சிந்தாமல் சிதறாமல் சென்டம் அடிக்கிறார்கள் பல மாணவர்கள். அப்படி சென்டம் வாங்க எப்படிப் படிக்க வேண்டும்? எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்?

10 மதிப்பெண் கேள்விகளுக்கு…

இது அல்லது அது பேட்டர்னில் 3 ஜோடி கேள்விகள் கேட்கப்படும். மூன்று கேள்விகளுக்கும் பதில் எழுத, ஆவர்த்தன அட்டவணை, ‘சி’ தொகுதி தனிமங்கள், அணைவுச் சேர்மங்கள், உட்கரு வேதியியல், இடநிலைமை, புறப்பரப்பு வேதியியல் ஆகிய 6 பாடங்களில் இருக்கும் 10 மதிப்பெண் பதில்களை முழுமையாகப் படியுங்கள்.

5 மதிப்பெண் கேள்விகளுக்கு…

இதில் 12 கேள்விகளில் ஏழுக்குப் பதில் அளிக்க வேண்டும். சேப்டர் 4, 5, 6, 9, 10, 17, 22 ஆகியவற்றில் இருக்கும் 5 மதிப்பெண் பதில்களை முழுமையாகப் படியுங்கள். இந்த ஏழு பாடங்களுமே சின்னச் சின்னப் பாடங்களே. அதனால், பதில்களும் எளிதாகவே இருக்கும்.

3 மதிப்பெண் கேள்விகளுக்கு…

இதில் 21 கேள்விகள் கேட்கப்பட்டு பதினைந்துக்குப் பதில் எழுத வேண்டும். 1 முதல் 4, 7 முதல் 13, 15 மற்றும் 22 ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் வரும்.

1 மதிப்பெண் கேள்விகளுக்கு…

வேதியியல் பாடங்களில் மொத்தம் 300 ஒரு மதிப்பெண் கேள்விகள் இருக்கின்றன. இதில், 30 மட்டுமே வரும். 18 மதிப்பெண்களுக்குப் புத்தகத்தின் பின்பகுதியிலிருந்தே கேட்கப்படும். மிச்சம் 12 கேள்விகள் முந்தைய வருடங்களின் கேள்வித்தாள்களிலிருந்து வரும். எனவே, 2006 முதல் 2017 வரையான கேள்வித்தாள்களில் இருக்கிற ஒரு மதிப்பெண்களைப் படித்து மனதில் பதியுங்கள்.

ஈஸியாகத்தான் வரும்!

இந்த வருடம் மாணவர்கள் எழுதப்போகும் பேட்டர்ன், 36 வருடங்களாக இருப்பதே. இந்த வருடத்துடன் இந்த பேட்டர்ன் முடியப்போகிறது. அதனால், கேள்விகள் சுலபமாகத்தான் வரும். முந்தைய வருடங்களின் கேள்வித்தாள்களிலிருந்து 95 சதவிகிதம் கேட்கப்படும் என்பதால், 2006 முதல் 2017 வரையான கேள்வித்தாள்களை நன்கு ரிவைஸ் செய்யுங்கள்.

பெற்றோர்-ஆசிரியர் கழக மாடல் பேப்பர்கள்!

பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் 5 மாடல் பேப்பர்கள் ஆண்டுதோறும் வருகின்றன. இவற்றை முழுமையாகப் படித்துவிட்டால், சென்டம் எடுப்பது நிச்சயம். உதாரணமாக, ‘சி’ தொகுதி தனிமங்கள் பாடத்திலிருந்து பெற்றோர்-ஆசிரியர் கழக மாடல் பேப்பர்களில் என்னென்னெ கேள்விகள் வருகின்றனவோ, அவைதான் 36 வருடங்களாக பப்ளிக் எக்ஸாம் வேதியியல் கேள்வித்தாள்களில் வருகின்றன. ஸோ, வெற்றி நிச்சயம்!

கம்பல்ஸரி பிராப்ளம்ஸ்…

மற்ற பாடங்களைப் பொறுத்தவரை, எந்த சேப்டரிலிருந்தும் கம்பல்ஸரி பிராப்ளம்ஸ் வரலாம். வேதியியலில் மட்டும், ஜோடி ஜோடியாக 16 மற்றும் 4 சேப்டர்களிலிருந்தும், 18 மற்றும் 13 சேப்டர்களிலிருந்தும் கேட்கப்படும்.

————

வேதியியல் பற்றிய பயத்தைத் தூரவையுங்கள். ஒரு வருட காலமாக படித்த சேப்டர்களைத்தான் கேட்கப்போகிறார்கள். எந்தெந்த சேப்டரில் ஸ்ட்ராங்காக இருக்கிறீர்களோ, அவற்றை இரண்டு அல்லது மூன்று தடவை ரிவிஷன் செய்யுங்கள். எந்தெந்த செக்‌ஷனில் வீக்காக இருக்கிறீர்களோ அவற்றுக்கு அதிக நேரம் ஒதுக்கி, புரிந்து படியுங்கள்.

உடல் வேதியியலில் 23 மதிப்பெண்ணும், கனிம வேதியியலில் 19 மதிப்பெண்ணும், வால்யூம் II மூலம் 28 மதிப்பெண்ணும் சுலபமாக பெறமுடியும். இதற்கு, முந்தைய கேள்வித்தாள்களை ரெஃபர் செய்தாலே போதும்.

சுற்றிவளைக்காமல் நேர்க்கூற்றாகக் கேட்கப்படும் கேள்விகள் ஜஸ்ட் 7 மதிப்பெண்களுக்கும், கான்செப்ட் புரிந்து எழுதவேண்டிய கேள்விகள் 21 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். பதில்களைத் தெளிவாகப் புரிந்து படியுங்கள். தெரியாததை, இப்போதே ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபெறுங்கள்.

அப்ளிகேஷன் வகை கேள்விகளுக்கு 21 மதிப்பெண் தருவார்கள். HOTS என்பது கேள்வித்தாளின் கடினமாக ஒரு பகுதி. ஆனால், இதில் 10 மதிப்பெண்ணுக்கு மட்டுமே கேட்பார்கள் என்பதால், பயம் வேண்டாம்.

முக்கியமாகப் படிக்கவேண்டிய கான்செப்ட்கள்…

உடல் வேதியியல் பற்றி எல்லா வருடமும் கேட்கப்படும். அடர்த்தி பிரச்னைகள், படிகத்தின் குறைபாடுகள், எலக்ட்ரிக்கல் மற்றும் மேக்னடிக் பிராப்பர்ட்டீஸ், முடக்கப்புள்ளி அழுத்தம், சவ்வூடு அழுத்த எண்ணியல், நர்ன்ஸ்ட் மின்இயக்குவிசை சமன்பாடு அடிப்படையிலான பிராப்ளம்ஸ், கோல்ராஷ் லா அப்ளிகேஷன், அயனிச்செல் எதிர்வினை, நேர் மின்வாய், எதிர் மின்வாய் மற்றும் அதன் வினைபுரிதல்கள், புத்தகத்தில் இருக்கிற அனைத்து வரையறைகள் மற்றும் கணக்கீடுகள், அலகு மாற்றம் மற்றும் நியூமரிக்கல் ஈக்குவலன்ட்ஸ் ஆகியவற்றை நன்கு ரிவிஷன் செய்துகொள்ளுங்கள்.

கனிம வேதியியலில் படிக்க வேண்டியவை, பாடப்புத்தகத்தில் இருக்கும் உதாரண கேள்விகள், எக்ஸர்சைஸ் கேள்விகளில் P, D, F பகுதிகளில் இருக்கும் வினா-விடை என இரண்டையும் படித்துவிடுங்கள். அடுத்து, IUPAC பெயர், ஐஸோமெரிசம், பான்டிங் இன் காம்ளெக்ஸஸ், பொதுகொள்கைகளில் செறிவு முறைகள் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்கள்.

கரிம வேதியியலில் படிக்க வேண்டியவை, IUPAC பெயர், நேம்டு ரியாக்‌ஷன், மெக்கானிஸம், கன்வர்ஷன் அல்லது org பிராப்ளம்ஸ், NaBH4 மற்றும் LiAIH4 -ன் எல்லைகள், SN1 மற்றும் SN2 ரியாக்‌ஷன்.

இது சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட வேதியியல் என்பதால், வேதியியல் பரீட்சையில் கட்டாயம் நினைவில்வைத்துகொள்ள வேண்டிய விஷயங்களை, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறோம். வருடந்தோறும் இந்த 8 பாயிண்ட்களில்தான் மாணவர்கள், மதிப்பெண்களை தவறவிடுவதாக ஆசிரியர் வாணிஶ்ரீ சங்கரி குறிப்பிடுகிறார்.

1. Aldol- link only alpha carbon to carbonyl carbon.

2. Ea/ molar mass – do not forget per mole in units.

3. Part answers not applicable to comparative questions.

4. Learn /practise balanced equations in inorganic chemistry.

5. Solid state -a^3 is usually not done.

6. Faraday’s numericals- to calculate Z ,atomic mass is divided by charge on cation and 96500C/mol.

7. Arrhenius equation- log (k2/k1)….. and not log (k1/k2)….

8. colligative property- use i factor in formula.

– நன்றி விகடன்

Copyright © 2023 KalviApp. All rights reserved.