இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

November 02, 2021

மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகள்… விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 100% இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில், சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் 50% இடங்களும், சிறுபான்மையினரல்லாத கல்லூரிகளில் 65% இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருக்கும்.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான படிப்புகளைக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் மொத்தம் 19 வகையான இளநிலைப் பட்டப்படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளில் அரசு கல்லூரிகளில்

1. B.Pharm., – 4 ஆண்டுகள் – 120 இடங்கள்

2. B.Sc. (Nursing) – 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வியாண்டுகள் (4 Academic years of 8 Semesters) – 350 இடங்கள்

3. B.P.T – 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வியாண்டுகள் மற்றும் 6 மாதக் கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (4 Academic Years of 8 Semesters and 6 months Compulsory Resident Internship) – 100 இடங்கள்

4. B.ASLP (Bachelor in Audiology and Speech Language Pathology) – ஒரு ஆண்டு உள்ளகப் பயிற்சியுடனான 4 கல்வியாண்டுகள் (Academic Years including one year internship) – 25 இடங்கள்

5. B.Sc. (Radiology & Imaging Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப இருப்பிட உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 160 இடங்கள்

6. B.Sc. (Radio Therapy Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 30 இடங்கள்

7. B.Sc. (Cardio-Pulmonary Perfusion Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship)

8. B.Sc (Medical Laboratory Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 120 இடங்கள்

9. B.Sc (Operation Theatre & Anaesthesia Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 173 இடங்கள்

10. B.Sc (Cardiac Technology) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 49 இடங்கள்

11. B.Sc Critical Care Technology – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 80 இடங்கள்

12. B.Sc Dialysis Technology – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 105 இடங்கள்

13. B.Sc Physician Assistant – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 120 இடங்கள்

14. B.Sc Accident & Emergency Care Technology – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 130 இடங்கள்

15. B.Sc Respiratory Therapy – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாயத் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 54 இடங்கள்

16. B.Optom – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு காலக் கட்டாய உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 90 இடங்கள்

17. B.O.T – 8 பருவங்களைக் கொண்ட 4 கல்வியாண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு கட்டாய இருப்பிட உள்ளகப் பயிற்சி (4 Academic years of 8 semesters and 6 months compulsory Resident Internship) – 30 இடங்கள்

18. B.Sc. (Neuro Electro Physiology) 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு காலக் கட்டாய உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 15 இடங்கள்

19. B.Sc. (Clinical Nutrition) – 3 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டு காலக் கட்டாய உள்ளகப் பயிற்சி (3 years and one year Compulsory Resident Internship) – 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், பொதுவான கல்வித்தகுதியாக +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

  1. B.Pharm. / B.ASLP படிப்புகளுக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணிதம் பாடங்களின் மொத்த மதிப்பெண்களாகக் குறைந்தது 40% பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் மேற்காணும் பாடங்களுடன் +2 வகுப்பில் தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானது.
  2. B.Sc. (Nursing) படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களின் மொத்த மதிப்பெண்களாகக் குறைந்தது 45% பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் +2 வகுப்பில் மேற்காணும் பாடங்களின் மொத்த மதிப்பெண்களாகக் குறைந்தது 40% பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
  3. B. Optom படிப்புக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணிதம் பாடம் எடுத்துத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
  4. B.P.T, B.O.T மற்றும் B.Sc (Radiography & Imaging Technology / Radio – Therapy Technology / Cardio Pulmonary Perfusion Technology / Medical Laboratory Technology / Operation Theatre & Anaesthesia Technology / Cardiac Technology / Critical Care Technology / Physician Assistant / Accident & Emergency Care Technology / Respiratory Therapy / Dialysis Technician / Neuro Electro Physiology / Clinical Nutrition) படிப்புகளுக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானது.

வயது

B.Sc. (Nursing) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31-12-2021 அன்று 17 வயது நிறைவடைந்திருப்பதுடன் 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்சி. எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். B.ASLP படிப்புக்கு 1-7-2021 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். பிற படிப்புகள் அனைத்திற்கும் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி ஓசி – 31%, பிசி – 26.50%, பிசி (முஸ்லீம்) – 3.50%, எம்பிசி (வன்னியர்) – 10.50%, எம்பிசி மற்றும் டிஎன்சி – 7%, எம்பிசி – 2.50%, எஸ்சி – 15%, எஸ்சி (அருந்ததியர்) – 3.00%, எஸ்டி – 1% எனும் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்தத் தகவல்கள் தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.

மாணவர் சேர்க்கை இடங்கள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 100% இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில், சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் 50% இடங்களும், சிறுபான்மையினரல்லாத கல்லூரிகளில் 65% இடங்களும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருக்கும். இந்த இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பம்

மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்கும் www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org எனும் இணைய முகவரிகளிலான வலைத்தளம் ஒன்றில் இணைய வழியில் விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400/-செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பம் செய்ய இயலாதவர்கள், அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் / தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி / பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி / சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள இணையதள உதவி மையத்தின் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை அச்சிட்டு எடுத்துத் தேவையான இணைப்புகளுடன் “செயலாளர், தேர்வுக்குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -600010” எனும் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

கலந்தாய்வு

விண்ணப்பதாரர்களின் +2 மதிப்பெண்களில் உயிரியல் (X), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் (Y), தாவரவியல் மற்றும் விலங்கியல் (Z), கணிதம் (W) எனக் கொண்டு ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்களுக்குக் (சதவிகித அளவில்) கணக்கிடப்பட்டு, பின்னர் X + Y அல்லது Z + Y அல்லது W + Y என்று 200 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு, அதற்கான தரப்பட்டியல் மேற்காணும் இரு இணையதளங்களிலும் வெளியிடப்படும். தரப்பட்டியல் வெளியீட்டு நாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் முறையில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களை முதன்மையாகக் கொண்டு, ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

மாணவர் சேர்க்கை

கலந்தாய்வுக்கான அட்டவணை மேற்காணும் இரு இணையதளங்களிலும் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இணைய வழியில் நடைபெறும் இக்கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ரூ.250/- கலந்தாய்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பெறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், அரசு அல்லது சுயநிதிக் கல்லூரிகளில், தாங்கள் விரும்பும் மருத்துவம் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பினைத் தேர்வு செய்து சேர்க்கைக்கான அனுமதியினைப் பெறலாம்.

கல்லூரிக் கட்டணம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கும் ரூ.3000/- என்று ஆண்டுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் B.Pharm., – ரூ.43,000/- B.Sc. (Nursing) – ரூ.45,000/-, B.P.T. – ரூ.33,000/- B.O.T. – ரூ.33,000/- என்று ஒவ்வொரு படிப்புக்கும் ஆண்டுக்கட்டணம் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து படிப்புகள் தவிர, மற்ற படிப்புகளுக்குச் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எதுவும் இல்லை.

கூடுதல் தகவல்கள்

மேற்காணும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களை அறிய www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org எனும் இரு இணையதளங்களில் ஒன்றிலிருந்து தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது இப்படிப்புகளுக்கான தேர்வுக்குழு அலுவலகத்தின் 044- 28361674 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது 9884224648 / 9884224649 / 9884224745 / 9884224746 ஆகிய உதவி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.