இந்த பகுதிக்கு உங்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

உங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகளை எங்களுக்கு எழுத்து வடிவில் அனுப்பவும். திறன்களை உலகறிய செய்வோம்.

அனுப்பவும்

June 15, 2020

புத்திசாலித்தனமான உழைப்பிற்கும் கடினமான உழைப்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்ன?

பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு வாடிக்கையாளர் தான் வாங்கிய சோப்பு பெட்டி காலியாக இருந்ததாக புகார் அளிக்கிறார்.உடனடியாக புகார் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பொறியாளர் இருவருக்கு சரிசெய்ய அனுப்பப்பட்டது.

இரு பொறியாளர்களும் மிகப்பெரிய பொருட் செலவில் X கதிர்களால் காலி பெட்டிகளை கண்டறிய சாதனம் உருவாக்கப்பட்டு இரு ஊழியர்கள் மூலம் கண்காணிக்கப் பட்டது.

இதே பிரச்சினை கடைநிலை ஊழியர்களிடம் தெரிவிக்கப் பட்டது.ஆனால் அவர்கள் X கதிர்கள் போன்று கடினமாக யோசிக்காமல் ஒரு வித்தியாசமான மற்றும் எளிய தீர்வுடன் களமிறங்கினர்.

ஒரு இயந்திர விசிறியை சோப்பு பெட்டிகள் நகர்ந்து வரும் பாதையில் வைத்தனர்.விசிறியில் வரும் காற்று காரணமாக காலி பெட்டிகள் கீழே விழுந்தன.சோப்பு உள்ள பெட்டிகள் மட்டும் கடந்து சென்றன.

கதை கருத்து :

வாழ்க்கையில் ஏதேனும் சிரமங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், நாம் எப்போதும் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறோம். அந்த நேரத்தில் பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Copyright © 2023 KalviApp. All rights reserved.