1 .இந்தியாவின் முதல் திருநங்கையினருக்கான தடகள விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்ற நகரம் ?
A) திருவனந்தபுரம்
B) மும்பை
C) பூனே
D) புவனேஸ்வர்
2. தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கப்படவுள்ள மாவட்டம் எது ?
A) திருச்சி
B) சிவகங்கை
C) விருதுநகர்
D) தஞ்சாவூர்
3. காற்றின் ஒளிவிலகல் எண்
A) 0
B) 1
C) 2
D) 4
4. இராஜாராம் மோகன்ராய் உருவாக்கியது
A) பிரம்ம சமாஜ்
B) தியாசாபிகல் சொஸைடி
C) ஆர்ய சமாஜம்
D) எதுவும் இல்லை
5. இந்திய தேசிய ஆவண காப்பகம் அமைந்துள்ள இடம்
A) சென்னை
B) கொல்கத்தா
C) மும்பை
D) புதுடெல்லி
6. நெல் என்பது ஒரு
A) இரு விதையிலைத்தாவரம்
B) பாசி
C) ஒரு விதையிலைத்தாவரம்
D) ஒருவகை பயிர்
7. ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது
A) நியூட்டன் விதி
B) டெய்லர் விதி
C) ஆற்றல் அழிவின்மை விதி
D) டார்வின் விதி
8. ஒருவர் அவரது மகனை விட 24 வயது மூத்தவர். அடுத்த 2 வருடத்தில் அவர் மகனைவிட 2 மடங்கு ஆவார். மகனின் தற்போதைய வயது என்ன?
A) 14 ஆண்டுகள்
B) 18 ஆண்டுகள்
C) 20 ஆண்டுகள்
D) 22 ஆண்டுகள்
9. ஒரு கனசதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ எனில் அதன் புறப்பரப்பளவு எவ்வளவு?
A) 625 ச.செ.மீ
B) 125 ச.செ.மீ
C) 150 ச.செ.மீ
D) 100 ச.செ.மீ
10. உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர்
A) பெப்சின்
B) லிப்பேஸ்
C) டயலின்
D) அமிலேஸ்
11. மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம்
A) பெங்களூர்
B) நியூடெல்லி
C) சென்னை
D) மும்பை
12. அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் எது?
A) வியாழன்
B) சனி
C) செவ்வாய்
D) புதன்
13. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்
A) தொலைவுகளின் விதி
B) பரப்புகளின் விதி
C) சுற்றுப்பாதைகளின் விதி
D) காலங்களின் விதி
14. மிகவும் கனமான உலோகம்
A) தேனிரும்பு
B) ஆஸ்மியம்
C) எஃகு
D) தாமிரம்
15. உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண்
A) 0
B) 1
C) -1
D) 2
16. கார்பனின் அணுநிறை எத்தனை?
A) 8
B) 10
C) 11
D) 12
17. கீழ்க்கண்டவற்றில் உலோகமற்றவை எது?
A) செம்பு
B) தகரம்
C) கந்தகம்
D) அலுமினியம்
18. தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்பொது?
A) நவம்பர் 19
B) நவம்பர் 18
C) நவம்பர் 17
D) நவம்பர் 16
19. உலகின் மிகப் பெரிய நீர் மின்சக்தி நிலையமான முப்பள்ளத்தாக்கு அணை அமைந்துள்ள நாடு?
A) இந்தியா
B) அமெரிக்கா
C) ஜப்பான்
D) சீனா
20. இராஜ்யசபா எனப்படும் பாராளுமன்றத்தின் மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
A) 250
B) 236
C) 238
D) 245
1. A
2. B
3. B
4. A
5. D
6. C
7. C
8. D
9. C
10. C
11. B
12. A
13. C
14. B
15. C
16. D
17. C
18. A
19. D
20. C